For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் பட்டதாரிகளுக்கு அருமையான வேலை.. ஒரு லட்சம் வரை சம்பளம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பிஇ பிடெக் மற்றும் டிகிரி படித்த பட்டதாரிகள் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த பணியிடங்கள்: 242

உதவி பொறியாளர் (Assistant Engineer) 78 காலியிடங்கள்
சுற்றுச்சூழல் விஞ்ஞானி (Environmental Scientist) 70 காலியிடங்கள்
உதவியாளர் (ஜுனியர் அசிஸ்டெண்ட் ) 38 பணியிடங்கள்
டைப்பிஸ்ட் - 50 பணியிடங்கள்

tamil nadu pollution control board recruitment 2020 : how to apply

ஊதியம்
இதில் உதவி பொறியாளர் (Assistant Engineer) மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானி (Environmental Scientist) ஆகிய பணியிடங்களுக்கு ஊதியமாக ரூ.37,700-1,19500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உதவியாளர் (ஜுனியர் அசிஸ்டெண்ட் ), டைப்பிஸ்ட் ஆகிய பணியிடங்களுக்கு ரூ.19.500- 62000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை தோராயமானது. கூடவோ குறையவோ வாய்ப்பு உள்ளது. இந்த பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் தமிழகத்தின் எந்த பகுதியிலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.

அறிவிப்பு வெளியான தேதி: 5/03/2020

தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க கடைசி தேதி 26.3.2020

விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி 26.3.2020

வயது தகுதி: 12.2.2020 அன்றுப்படி பிசி, எம்பிசி, பிசிஎம், எம்பிசி, எஸ்சி எஸ்டி உள்ளிட்ட பிரிவினர் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

12.2.2020 அன்றுப்படி பொதுப்பிரிவினர் 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விதவைகளுக்கு இரண்டு ஆண்டு வயது சலுகை உண்டு. ஊனமுற்றோருக்கு 10 வருடங்கள் வயது சலுகை உள்ளது. முன்னாள் ராணுவத்தினர் 53 வயது வரை விண்ணப்பிக்கலாம்

உதவி பொறியாளர் (Assistant Engineer) பணிக்கு அடிப்படை தகுதியாக சிவில் இன்ஜினியரிங் அல்லது கெமிக்கல் இன்ஜினியரிங் அல்லது சுற்றுச்சூழல் பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதுகலை பிரிவில் சுற்றுச்சூழல் பொறியியல் அல்லது கெமிக்கல் என்ஜினியரிங் அல்லது எம்டெக் சுற்றுச்சூழல் அறிவிய தொழில் நுட்பம் பட்டம் பெற்றிருக்க வேணடும்.

சுற்றுச்சூழல் விஞ்ஞானி பணிக்கு வேதியியல், உயிரியல், விலங்கியல், சுற்றுச்சூழல் வேதியியல், சுற்றுச்சூழல் அறிவியல், மைக்ரோ பயாலஜி, தாவரவியல் உள்பட பல்வேறு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உதவியாளர் பணிக்கு டிகிரி படித்திருக்க வேண்டும். கணிணியில் டிப்ளமோ சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.

டைப்பிஸ்ட் பணிக்கு ஏதேனும் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் டைப்பிங் தேர்வு முடித்திருக்க வேண்டும்.

முழு விவரங்களுக்கு கீழே உள்ள பிடிஎப் பைலை பார்த்து அறியலாம்.

English summary
tnpcb2020 : tamil nadu pollution control board recruitment 2020 : how to apply
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X