
கைநிறைய சம்பளம்.. டிசிஎஸ் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்பு.. யாருக்கெல்லாம் வாய்ப்பு?
சென்னை: இந்தியா உள்பட வெளிநாடுகளில் இயங்கி வரும் பிரபல தனியார் நிறுவனமான டிசிஎஸ்ஸில் 2 பிரிவுகளில் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், அதற்கான தகுதி என்ன? என்பது பற்றிய முழுவிபரங்கள் வெளியாகி உள்ளது.
Recession (மந்தநிலை) காரணமாக தற்போது பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. கூகுள், ட்விட்டர், அமேசான், பைஜூஸ், பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா உள்பட ஏராளமான நிறுவனங்கள் பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டு ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால் இந்தியாவில் உள்ள தகவல் தொழில் நுட்பங்கள் சார்ந்த துறையில் பணியாற்றும் ஊழியர்களும் வேலையிழப்பை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தான் டிசிஎஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
மாதம் ரூ.55,000 ஊதியம்.. பெல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு.. வெளியான புதிய அறிவிப்பு

காலியிடங்கள் எவ்வளவு?
இந்தியாவில் உள்ள பிரபல தனியார் மென்பொருள் நிறுவனங்களில் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (Tata Consultancy Service) எனும் டிசிஎஸ்/TCS நிறுவனமும் ஒன்றாகும். சென்னை உள்பட நம் நாட்டின் பல இடங்களில் டிசிஎஸ் நிறுவனத்தின் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனத்தில் தற்போது Frontend Developer and Lead - Angular எனும் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த 2 பிரிவுகள் காலியிடங்களின் எண்ணிக்கை பற்றிய விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் ஏராளமானவர்களை அந்த நிறுவனம் தேர்வு செய்யலாம் என கூறப்படுகிறது.

சம்பளம் -கல்வி தகுதி என்ன?
மேலும் சம்பளம் பற்றிய அறிவிப்பு வெளியாகாத நிலையில் தகுதி, திறமையின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம், கல்லூரிகளில் இன்ஜினியரிங் உள்பட ஏதேனும் ஒருபிரிவில் இளங்கலை படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் பணிக்கு தொடர்புடைய துறையில் 3 முதல் 10 ஆண்டுகள் வரை முன்அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதுமட்டுமின்றி Bootstrap, CSS3, HTML5, Javascript, Angular JS உள்ளிட்டவற்றை அறிந்தவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பம் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறும் விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் நேர்க்காணல் அல்லது திறனறி தேர்வு (Skill Test) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பம் செய்ய 2023 பிப்ரவரி மாதம் 27 ம் தேதி கடைசி நாளாகும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வாய்ப்பு
டிசிஎஸ் நிறுவனத்தின் https://ibegin.tcs.com/iBegin/ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று Search Jobs என்பதை கிளிக் செய்து பணி தொடர்பான அறிவிப்பை கிளிக் செய்து விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து விண்ணப்பம் செய்ய Click Here