சென்னையில் ஐடி வேலை.. மே 24ல் ஆன்லைனில் நடக்கும் இண்டர்வியூ.. TCS-ல் பணியாற்ற ரெடியா?
சென்னை: சென்னையில் இயங்கி வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் மே 24ம் தேதி இண்டர்வியூ நடைபெற உள்ளது. இந்த இண்டர்வியூ எந்த பணிக்கு நடைபெற உள்ளது? யாரெல்லாம் பங்கேற்கலாம்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
சென்னையில் டிசிஎஸ் எனும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தற்போது SAP Success Factors பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணியை பெற விரும்புவோர் சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 முதல் 10 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஸ்கில்ஸாக SAP Success Factors உள்ளது.
மேலும் கீழே உள்ள 12 தகுதிகளில் குறைந்தபட்சம் 5 இருக்க வேண்டும். இவற்றில் 5க்கு குறைவான தகுதிகள் இருப்பின் அவர்கள் தேர்வு செய்யப்படமாட்டார்கள்.
* குறைந்தபட்சம் 5-8 End-End-To Implementations in EC
* இசியில் டைம் மற்றும் பொசிசன் மேனேஜ்மென்ட்
* எம்டிஎப் ஆப்ஜெக்ட்ஸ், ரூல்ஸ் மற்றும் வொர்க் ப்ளோ ஆகியவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்
* எச்ஆர் பிசினஸ் மற்றும் டேலன்ட் மேனேஜ்மென்ட் புராசஸ் பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும்
* SAP-ல் பேரோல் மற்றும் பெனிபிட்ஸ் தெரிந்திருக்க வேண்டும்.
* கேப் அனலிசிஸ் (gap analysis) ஸ்ரடிஜிக் ரோட்மேப்ஸ்/ப்ளூபிரிண்ட் டெவலப்மென்ட்(strategic roadmap/blueprint development) உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
* டைம்ஆஃப் ரூல்ஸ், கான்பிகரேஷன் ஆப் டைம் ஆப்ஜெக்டஸ், பற்றிய புரிதல் இருக்க வேண்டும்.
* கஸ்டமர் முதல் டாப் மேனேஜ்மென்ட் வரை சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும்.
* பிழைகளை திருத்தம் செய்வது, பிரச்சனைகளை தீர்ப்பது உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
* ப்ரோஅக்டிவிலி மானிட்டரிங் சொல்யூஷன்ஸ் மற்றும் அப்ளிகேஷனில் அனுபவம் இருக்க வேண்டும்.
* பிற modules பற்றி தெரிந்திருப்பது என்பது பிளஸ் பாயிண்ட்டாகும்.
* சக்சஸ் பேக்டர்ஸ் இன்டிகிரேஷன் சென்டரில் அனுபவம் இருக்க வேண்டும்
* Requirements-யை பொறுத்து running Advanced and ad-hoc reports தர தெரிந்திருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது மே 24ம் தேதி நடைபெற உள்ளது. இந்த இண்டர்வியூ (Virtual) ஆன்லைனில் நடைபெறும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications