நல்ல சம்பளம்.. 10, டிகிரி, பிஇ, பிடெக் முடித்திருந்தால் பணி..திருவள்ளூர் சுகாதாரத்துறையில் வேலை
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் பிஇ, பிடெக் முடித்தவர்கள் வரை விண்ணப்பம் செய்யலாம்.
தமிழ்நாட்டில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் மாவட்ட வாரியாக காலியாக உள்ள பணிகள் தொடர்ச்சியாக நிரப்பப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தான் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலிப்பணியிடங்கள் எவ்வளவு?
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மாவட்ட நலச்சங்கம் மூலம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. அதன்படி ஐடி கோஆடினேட்டர் பணிக்கு ஒருவர், டென்டல் அசிஸ்டென்ட் பணிக்கு 4 பேர், செக்டார் ஹெல்த் நர்ஸ்/அர்பன் ஹெல்த் மேனேஜர் பணிக்கு 5 பேர், அக்கவுண்ட் அசிஸ்டென்ட் பணிக்கு 2 பேர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு ஒருவர், ஏஎன்எம் (Auxiliary Nurse Mid Wives)/ Urban Health Nurse பணிக்கு 8 பேர், மல்டி பர்பஸ் ஹாஸ்பிட்டர் வொர்க்கர் பணிக்கு 2 பேர், ஆர்பிஎஸ்கே பார்மசிஸ்ட் பணிக்கு ஒருவர் என மொத்தம் 24 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வி தகுதி என்ன?
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக கல்வித்தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 10ம்வகுப்பு முடித்தவர்கள் முதல் டிகிரி, டி பார்ம், பி பார்ம், பிஎஸ்சி நர்சிங், டிஜிஎன்எம், ஏஎன்எம், எம்எஸ்சி நர்சிங், எம்சிஏ, பிஇ, பிடெக் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய முடியும்.

மாத சம்பளம் என்ன?
பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்குமான சம்பளம் தனித்தனியே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி குறைந்தபட்சமாக ரூ.8 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு பணிக்கு எவ்வளவு சம்பளம் என்பது கீழே இணைக்கப்பட்டுள்ள பணி தொடர்பான அறிவிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி?
பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதார பணிகள், மாவட்ட தலவாழ்வு சங்கம் (District Health Society), துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம், 54/5.ஆசூரி தெரு, திருவள்ளூர் மாவட்டம், என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஜனவரி 9ம் தேதிக்குள் அங்கு செல்ல வேண்டும்.
பணி தொடர்பான கூடுதல் விபரங்கள் மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications