தேசிய பாதுகாப்பு அகாடமிகளில் சூப்பர் வேலை.. சென்னையில் அதிக பணியிடம்.. விண்ணப்பிக்க ரெடியா?
சென்னை: மத்திய பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் தேசிய பாதுகாப்பு அகாடமிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் தான் ஏராளமானவர்களை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு வகை பணிக்கு யூபிஎஸ்சி (UPSC)எனும் மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் மத்திய பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு என்பது தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
தேசிய பாதுகாப்பு அகாடமியில் (National Defence Academy) மொத்தம் 341 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி டேராடூனில் உள்ள இந்தியன் மிலிட்டரி அகாடமியில் 100 பேர், எளிமலாவில் உள்ள இந்தியன் Naval அகாடமியில் 22 பேர், ஹைதராபாத்தில் உள்ள ஏர்போர்ஸ் அகாடமியில் 32 பேர் சென்னையில் உள்ள ராணு அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 187 (17 பெண்கள்) என மொத்தம் 341 பணியிடங்கள் நிரப்பபட உள்ளது.

கல்வி தகுதி என்ன?
டேராடூன் மிலிட்டரி பயிற்சி அகாடமி மற்றும் சென்னை ராணுவ பயிற்சி அகாடமி பணிக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும். இந்தியன் Naval அகாடமி பணிக்கு என்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஹைதராபாத் ஏர்போர்ஸ் அகாடமியின் பணிக்கு டிகிரி படிப்பு (10, 12ல் இயற்பியல், கணக்கு பாடம் படித்திருக்க வேண்டும்) இல்லாவிட்டால் என்ஜினீயரிங் படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு என்ன?
டேராடூனில் உள்ள இந்தியன் மிலிட்டரி அகாடமி மற்றும் இந்தியன் Naval அகாடமி பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 200 ஜனவரி 2ம் தேதிக்கு முன்பும், 2005 ஜனவரி 1 ம் தேதிக்கு பிறகும் பிறந்திருக்க கூடாது. ஹைதராபாத் ஏர்போர்ஸ் அகாடமிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 20 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். சென்னை ராணு அதிகாரிகள் பயிற்சி மையத்துக்கான பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் ஆண்கள், பெண்கள் 1999 ஜனவரி 2ம் தேதிக்கு முன்பாகவும், 2005 ஜனவரி 1ம் தேதிக்கு பிறகும் பிறந்திருக்க கூடாது.

சம்பளம் என்ன?
இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்யும் ஆண், பெண்கள் திருமணம் செய்திருக்க கூடாது. விவாகரத்து மற்றும் கணவரை இழந்து மறுமணம் செய்யாத பெண்களும் விண்ணப்பம் செய்யலாம். சம்பளம் பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்படவில்லை. இருப்பினும் கைநிறைய சம்பளம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

விண்ணப்பம் செய்வது எப்படி?
விண்ணப்ப கட்டணமாக ரூ.200 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது. விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் 2023 ஜனவரி மாதம் 10ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்பவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications