IT Jobs: சென்னையில் ஐடி வேலை வேண்டுமா? பிரபல நிறுவனம் தரும் சூப்பர் சான்ஸ்.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான Virtusa-வில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். விண்ணப்பம் செய்வோருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
Virtusa.. ஐடி துறையில் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் ஐடி கன்சல்டிங், பிசினஸ் கன்சல்டிங், அவுட்சோர்சிங் சர்வீஸ் உள்ளிட்ட சேவகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்கு பல நாடுகளில் கிளைகள் உள்ளன.
தமிழகத்தில் சென்னையில் Virtusa அலுவலகம் உள்ளது. Virtusa நிறுவனத்தில் தற்போது சாப்ட்வேர் இன்ஜினியர் (Software Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணியை பெற விரும்புவோர் கல்லூரியில் பிடெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பை முடித்திருக்க வேண்டும். அதோடு, சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் 2 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
மேலும், 24X7 முறையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். இானல் ஷிப்ட் என்பது சுழற்சி அடிப்படையில் இருக்கும். இரவு பணியை மேற்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். பிரைமரி ஸ்கில்ஸ் ஆக ஐடிஐஎல், லினக்ஸ், புராடக்சன் சப்போர்ட், எஸ்க்யூஎல், பிஎல் எஸ்க்யூஎல் புரோகிராமிங் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். அனலிட்டிக்கல்ஸ் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். ஐடிஐஎல் கான்செப்ட் மற்றும் புராடெக்சன் சப்போர்ட் உள்ளிட்டவற்றின் அடிப்படை தெரிந்திருந்தால் அது பிளஸ் பாயிண்ட்டாகும்.
ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். டீமாகவும், தனி ஆளாகவும் சேர்ந்து பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திறமை மற்றும் அனுபவத்தை பொறுத்து சம்பளம் வழங்கப்படும்.இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
தற்போதைய அறிவிப்பில் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. தேர்வாகும் நபர்கள் சென்னை அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications