நல்ல சம்பளம்.. டிகிரி முடித்தவர்களை அழைக்கும் விப்ரோ நிறுவனம்.. கோயம்புத்தூரில் தான் பணி!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் உள்ள விப்ரோ நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்து பயன் பெறலாம்.

இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று விப்ரோ. இது கர்நாடகா மாநிலம் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்துக்கு தமிழகம் உள்பட பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளன. இந்நிலையில் தான் தமிழ்நாட்டின் தொழில் நகரமான கோவையில் உள்ள விப்ரோ நிறுவனத்துக்கான ஆட்சேர்ப்பு துவங்கி உள்ளது.

 காலியிடங்கள் என்ன?

காலியிடங்கள் என்ன?

விப்ரோ நிறுவனத்தில் காலியாக உள்ள Lead Administrator எனும் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. மொத்த காலியிடங்கள் பற்றிய விபரங்கள் வெளியாகாத நிலையில் பணிக்கு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 கல்வி தகுதி-மாத சம்பளம் என்ன?

கல்வி தகுதி-மாத சம்பளம் என்ன?

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் பிஇ/பிடெக் அல்லது ஏதேனும் ஒரு பாடத்தில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு திறமையின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்பட உள்ளது. பணிக்கு விண்பண்பம் செய்பவர்கள் Skil Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வயது வரம்பு என்ன?

வயது வரம்பு என்ன?

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கான வயது வரம்பு என்பது அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இதனால் டிகிரி முடித்தவர் அனைத்து வயதினரும் விண்ணப்பம் செய்யலாம். இருப்பினும் அவர்கள் தகுதி, திறமையின் அடிப்படையில் தான் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணி என்ன?

பணி என்ன?

இந்த பணி என்பது கட்டடம் தொடர்பான திட்டமிடல், அதுசார்ந்த வடிவமைப்புகளை தொழில்நுட்பத்தின் உதவியுடன் வடிவமைப்பதை நோக்கமாக கொண்டதாகும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விப்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான இறுதி தேதி இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இருப்பினும் முடிந்தவரை அனைவரும் விரைந்து விண்ணப்பம் செய்ய வேண்டும்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+