"அனுபவம் வேண்டாம்".. ZOHO ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. வெளியான முக்கிய அறிவிப்பு..
சென்னை: ஜோஹோ ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய எந்தெந்த தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
இப்போது ஐடி நிறுவனங்களில் பணியாற்ற வேண்டும் என்பது பலருக்கும் கனவாக உள்ளது. அதிலும் பிரபலமான நிறுவனங்களில் பணியாற்றி கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு படிப்புகளை பலரும் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் முன்னணி ஐடி நிறுவனமான ஜோஹோவில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
ஜோஹோ ஐடி நிறுவனத்தில் தற்போது சாப்ட்வேர் டெவலப்பர் (Software Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்த படிப்பை 2025ம் ஆண்டில் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
சாப்ட்வேர் டெவலப்பர் பிரிவில் 0 - 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். குறிப்பாக அவர்களுக்கு சி, சி++ மற்றும் ஜாவா உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். கோடிங் எழுத தெரிந்திருக்க வேணடும். புராடெக்ட் டெவலப்மென்ட் லைப் சைக்கிளில் அனைத்து பிரிவுகளிலும் பங்களிப்பு செய்ய வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பணி நியமனம் செய்யப்படலாம். இதனால் விண்ணப்பம் செய்வோர் அதற்கு தயாராக இருக்க வேண்டும். பணியிடம் என்பது கடைசி கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்படும். பணிக்கான மாதசம்பளம் பற்றிய விபரம் எதுவும் தற்போதைய அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்பது குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications