மதுரையில் கொட்டித்தீர்த்த கனமழை: மீனாட்சியம்மன் கோவிலுக்குள் புகுந்த மழை நீர்!
மதுரையில் பெய்த கனமழை காரணமாக மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் வெள்ள நீர் புகுந்தது.
மதுரை: கனமழை காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வெள்ள நீர் புகுந்ததால் பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளிலும் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது. சென்னை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, அரியலூர் என பல இடங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

மதுரையில் நேற்று இரவு சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் மதுரையில் முக்கிய பகுதிகளான பெரியார், சிம்மக்கல், கோரிப்பாளையம் ஆகிய பகுதிகளில் மழை நீர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடியது.
உலகப்புகழ் வாய்ந்த மீனாட்சி அம்மன் கோவிலுக்குள்ளும் மழை நீர் புகுந்தது. கொடி மரம் அமைந்துள்ள மண்டப பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
கோவில் முழுவதும் மழை நீர் புகுந்ததால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். தொடர்ந்து மழை நீரை வெளியேற்றும் பணி நடக்கிறது.
கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளிலும் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications