அரக்கோணம் அருகே மன உளைச்சலால் பெற்ற மகனை கிணற்றில் வீசி கொன்ற பயங்கரம்.. தப்பியோடிய தந்தைக்கு வலை
பெற்ற மகனை கிணற்றில் வீசி தந்தை கொலை செய்துள்ளார்.
அரக்கோணம்: அரக்கோணம் அருகே தான் மன உளைச்சல் காரணமாக பெற்ற மகனை கிணற்றுக்குள் வீசி கொலை செய்துள்ளார் ஒரு தந்தை.
அரக்கோணம் அருகே உள்ள பகுதி கணபதிபுரம். இங்கு தன் இரு மகன்களுடன் வசித்து வருபவர் முனியப்பன். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் என கூறப்படுகிறது. இதனால் 7 வயது, மற்றும் மூன்றரை வயது மகனை தன்னுடனே வைத்து வளர்த்து வந்துள்ளார். ஆனாலும் முனியப்பன் நீண்ட காலம் விரக்தியிலும், மன அழுத்தத்திலும் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று கடும் மன உளைச்சலில் இருந்த நிலையில், முனியப்பன் தன் இரண்டு மகன்களையும் வீட்டுக்கு பக்கத்திலுள்ள ஒரு கிணற்றில் வீசினார். ஆனால் 7 வயது மகன் தத்தளித்து கிணற்றிலிருந்து மேலே வந்துவிட்டான்.
மகன் மீண்டு கிணற்றிலிருந்து வந்ததை கண்ட முனியப்பன், அவனை இழுத்துக் கொண்டு போய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். ஆனால் தந்தையின் பிடியிலிருந்து தப்பித்து வெளியே ஓடிவந்த சிறுவன் பயத்தில் அலறி கத்தினான். இதனால் விரைந்து வந்த அக்கம்பபக்கத்தினர், வீட்டிற்குள் நுழைந்து தற்கொலைக்கு முயன்று கொண்டிருந்த முனியப்பனை காப்பாற்றினர்.
இதையடுத்து, தன் தம்பி கிணற்றில் மூழ்கி கொண்டிருக்கிறான் என சிறுவன கூறவும், அங்கிருந்தோர் சிறுவனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அந்த மூன்றரை வயது சிறுவனை அவர்கள் சடலமாகத்தான் மீட்டனர். அக்கம்பக்கத்தினரை பார்த்ததும், தன் மகன் உயிரிழந்துவிட்டது தெரிந்ததும், முனியப்பன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவுசெய்ததுடன், சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தப்பியோடிய முனியப்பனையும் தேடிவருகின்றனர்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications