இப்போ எவ்வளவு சம்பாதிச்சு என்ன.. இன்னும் அந்த ரிமோட் கண்ட்ரோல் காரை வாங்க முடியலயே!
சென்னை: காதலர் தினத்தைக் கொண்டாடுவதில் காதலர்கள் ஒருபுறம் பிஸியாக இருக்க, இன்னும் தங்களுக்கு கல்யாணம் ஆகவில்லையே என்ற விரக்தியில் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் 90ஸ் கிட்ஸ்கள்.
முகூர்த்தங்கள் நிறைந்த மாதம் என்றாலே, 90ஸ் கிட்ஸ்களையும், அவர்களது திருமணத்தையும் கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர ஆரம்பித்து விடுவார்கள் சமூகவலைதளப் பக்கங்களில். போதாக்குறைக்கு இந்த மாதம் காதலர் தினம் வேறு வருவதால், கேட்கவா வேண்டும். காதலர்கள் ஒருபுறம் மீம்ஸ்கள் மூலம் காதலைக் கொண்டாடிக் கொண்டிருக்க, மற்றொருபுறம் 90ஸ் கிட்ஸ்களை கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் குறும்புக்கார மீமர்கள்.
அதிலும் 90ஸ் கிட்ஸ்கள் பார்வையிலேயே இந்த மீம்ஸ்கள் இருப்பது வேற லெவலில் ரசிக்கும்படி உள்ளன. "இப்போ எவ்வளவு சம்பாதிச்சு என்ன.. இன்னும் அந்த ரிமோட் கண்ட்ரோல் காரை வாங்க முடியலயே!" என்பது மாதிரியான ஏக்க மீம்ஸ்களையும், "என்ன லைஃப் இது.. கலுக்குனு.. வாழ்க்கைனா கொஞ்சம் கலகலனு ஜாலியா இருக்க வேணாமா?" என்பது மாதிரியான புலம்பல் மீம்ஸ்களையும் கலந்து கட்டி கலாய்த்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications