For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாடா! என் ஏரியாவுக்கு வாடா! மைதானத்திலேயே சண்டைக்கு போன பாக் - ஆப்கான் வீரர்கள்.. டிரெண்டாகும் மீம்ஸ்!

Google Oneindia Tamil News

துபாய்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் நேற்று பாகிஸ்தான் அணி வென்று பைனல்ஸ் சென்றது. நேற்று இந்த போட்டியில் சோகம்.. கோபம்.. சண்டை.. விரக்தி என்று பல வித உணர்ச்சிகள் வீரர்களிடையே காணப்பட்டது.

ஒரு கோலிவுட் படத்தில் வரக்கூடிய எல்லா ட்விஸ்ட் அண்ட் டர்ன்களும் இந்த படத்தில் வந்தது. அதிலும் என் ஏரியாவுக்கு வாடா என்று வடிவேலு சொல்வது போல வீரர்கள் தங்களுக்கு இடையிலேயே நேற்று மாறி மாறி சண்டை போட்டுக்கொண்ட சம்பவமும்.. இதை பார்த்து ரசிகர்கள் மோதிக்கொண்ட சம்பவங்களும் அரங்கேறின.

ஷார்ஜாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 129/6 ரன்கள் எடுத்தது. 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் பாகிஸ்தான் ஆடியது. பாபர் ஆஸம் மீண்டும் மோசமாக சொதப்பி ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். ரிஷ்வான் 20, ஃபகார் 5 ரன்கள் என்று சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். அதன்பின் இப்திகார், சதாப் கான் ஆகியோர் சிறப்பாக ஆடிய நிலையில் பாகிஸ்தான் கடைசி ஓவரில் வென்றது.

“அதிசயம்” நடக்கலாம்! ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு “கடைசி சான்ஸ்”! எல்லாம் ஆப்கானிஸ்தான் கையில் “அதிசயம்” நடக்கலாம்! ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு “கடைசி சான்ஸ்”! எல்லாம் ஆப்கானிஸ்தான் கையில்

 மீம்ஸ்

மீம்ஸ்

இந்த மேட்சை வைத்து நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் போட்டு வருகிறார்கள். இந்த நசீம் ஷாதான் சிறப்பாக பேட்டிங் செய்தார். கடைசி ஓவர் வரை ஆப்கானிஸ்தான் கையில்தான் ஆட்டம் இருந்தது. ஏனென்றால் அவர்களின் பவுலிங் மிக சிறப்பாக இருந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் வெல்லும் என்றே பலரும் நினைத்தார்கள். ஆனால் நசீம் ஷா இரண்டு விக்கெட் எடுத்து ஆட்டத்தையே மாற்றினார். இதை வைத்து பலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

சண்டை

சண்டை

முக்கியமாக ராஜஸ்தான் வீரர் திவாதியா பஞ்சாப் அணிக்கு எதிராக ஆடியது போல நசீம் ஷா ஆடியதாக கூறி இருவரையும் ஒப்பிட்டு பல மீம்ஸ் போடப்பட்டு வருகிறது. நேற்று ஆட்டத்தில் 19வது ஓவர் வரை ஆசிப் அலி களத்தில் இருந்தார். அவர் 19வது ஓவரில் 5வது பந்தில் அஹமது மாலிக் ஓவரில் சிக்ஸ் அடித்தார். இந்த சிக்ஸ் அடித்த பின் அவர் அஹமது மாலிக்கை ஒரு மாதிரி முறைத்து பார்த்தார். மாலிக்கும் பதிலுக்கு அவரை முறைத்து பார்த்தார். இந்த நிலையில் அடுத்த பந்திலேயே அஹமது மாலிக் ஓவரில் ஆசிப் அலி அவுட் ஆனார்.

வம்பு

வம்பு

இந்த விக்கெட் போனதும் அஹமது மாலிக் ஆசிப் அலி முகத்திற்கு அருகே போய் மோசமாக நடந்து கொண்டார். அவரின் முகத்திற்கு முன் கையை நீட்டி திமிராக கொண்டாடினார். அதோடு ஆசிப் அலி திரும்பி செல்லும் போது அவரின் முதுகில் முட்டுவது போல அஹமது மாலிக் நெஞ்சால் முட்டினார். இதனால் உடனே ஆசிப் அலி கோபம் அடைந்தார். அஹமது மாலிக் ஒரு மாதிரி கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு ஓ என்று கத்தினார்.

கோபம் கத்தினார்

கோபம் கத்தினார்

இதனால் கோபம் அடைந்த ஆசிப் அலி, திரும்பி பார்த்து அவரை அடிப்பது போல சென்றார். இதற்கு அவரும் சண்டைக்கு வா என்று மல்லுக்கு நின்றார். இதற்கு பதிலடி தரும் விதமாக ஆசிப் அலியும் பேட்டை தூக்கிக்கொண்டு அவரை தாக்குவது போல சென்றார். இரண்டு அணி வீரர்களையும் நெட்டிசன்கள் இதற்காக விமர்சனம் செய்து வருகின்றனர். இதை வைத்து நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர். இதுதான் தற்போது கிரிக்கெட் உலகில் வைரல் டாப்பிக்காக இருக்கிறது.

இந்திய அணி

இந்திய அணி

நேற்று போட்டியில் ஆப்கானிஸ்தான் தோல்வி அடைந்ததன் மூலம் இந்திய அணி வெளியேறியது. ஆப்கானிஸ்தான் வெற்றிக்காக இந்திய அணி ரசிகர்கள் நேற்று பிரார்த்தனை செய்தனர். ஆனால் நேற்று கடைசி ஓவரில் ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு அருகில் சென்று தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணி பைனல் செல்லும் வாய்ப்பை இழந்தது. இதை வைத்து பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

குரூப் ஆட்டம்

குரூப் ஆட்டம்

பொதுவாக சமீப காலமாக ஐசிசி தொடர்களில் இந்தியா குழு ஆட்டங்களில் நன்றாக ஆடுகிறது. ஆனால் நாக் அவுட் சுற்றுகளில், சூப்பர் 8, சூப்பர் 4 சுற்றுகளில் மோசமாக சொதப்பி வருகிறது. இது இந்திய அணிக்கு பின்னடைவை தந்து உள்ளது. இதையும் நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். உலகக் கோப்பை 50 ஓவர் தொடரிலும் இந்திய அணி நாக் அவுட் சுற்றில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Asia Cup 2022: Netizens spill internet with memes after thrilling Pakistan and Afghanistan match.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X