காலை 9:30 மணிக்கு பஸ்ல சுப்ரபாதம் ஓடுது.. என்ன பண்றது க்ளைமேட் அப்படி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளதை வைத்து நெட்டிசன்கள் சமூகவலை தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் கடந்த 2 நாட்களாக பிரேக் விட்டிருந்த மழை இன்று மீண்டும் வேலையை தொடங்கியுள்ளது. சென்னை நகரின் பல இடங்களிலும் மற்றும் புறநகர் பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் பெய்துவரும் மழை குறித்தும் சென்னையில் தற்போதுள்ள க்ளைமேட் குறித்தும் நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில..

ரசிக்க தயாராகுங்கள்

"இன்று முதல் மீண்டும் வருகிறது #சென்னைமழை"
மழையை ரசிக்க தயாராகுங்கள்... என்கிறது இந்த டிவிட்

பிள்ளைகள் குறித்த கவலை

#மழை கவலை போய்
பள்ளி போய் வரும்
பிள்ளைகள்
தேங்கிய நீரில்
மூழ்கியெழுந்து வருமோவென்ற
கவலை தான்
பாதி பெற்றோருக்கு! என்கிறார் இந்த வலைஞர்

அடித்து நொறுக்குகிறதே

போதும் போதும் என்று சொன்னாலும் போகாத எந்த பக்கமும் என்று சும்மா அடித்து நொறுக்கிறதே..சென்னை மழை.. என்கிறார் இந்த நெட்டிசன்

இயல்புநிலைக்கு மாறினர்

திடீரென பெய்ய ஆரம்பித்த மழையால் பதட்டமான சென்னை மக்கள் தினம் தினம் மழை பெய்ததால் இயல்பு வாழ்க்கைக்கு மாறினர்... என்கிறார் இந்த வலைஞர்

அடுத்த ரவுண்டு ஆரம்பம்

சென்னை மழை அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. என்கிறது இந்த டிவிட்

க்ளைமேட் அப்படி

காலை 9:30 மணிக்கு பஸ்ல சுப்ரபாதம் ஓடுது. என்ன பண்றது க்ளைமேட் அப்படி... என்கிறார் இந்த வலைஞர்..

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Its rain in chennai again after a two days break. Netizens making fun of the chennai rain

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற