வலிக்காம தடுப்பூசி போடுங்க... அப்ப நயன்தாராவுக்கு போட்ட ஊசியைத்தான் போடணும் - கொரோனா வைரல் மீம்ஸ்
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்று அரசு கூறி வருகிறது. நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பலரும் தடுப்பூசி போட பயந்து கெண்டிருக்கின்றனர். கொரோனா காலத்தில் ப
சென்னை: சாதாரண காய்ச்சலுக்கு ஊசி போடுவது என்றாலே பலருக்கும் பயம். அதுவும் தடுப்பூசி என்றால் கேட்கவே வேண்டாம், வலிக்காம ஊசி போடுங்க சிஸ்டர் என்று தடுப்பூசி போடும் போது பலரும் கேட்க ஆரம்பித்து விட்டனர். கொரோனா பரவாமல் தடுக்க பல கோடி மக்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர். நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் போய் ஊசி போட்டதுதான் இப்போது வைரலாகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் இப்போது ட்ரெண்ட் ஆகி வரும் மீம்ஸ்களைப் பார்க்கலாம்.
Recommended Video
கொரோனா காலத்தில் யாருடைய உயிர் எப்படி போகிறது என்றே கண்டுபிடிக்க முடிவதில்லை.நேற்று வரை நம்மிடம் பேசிக்கொண்டிருந்தவர்கள் திடீரென மரணமடைந்து விடுகின்றனர். சமூக வலைத்தள பக்கங்களைப் பார்த்தாலே கண்ணீர் அஞ்சலி போஸ்டராகத்தான் இருக்கிறது. பிறந்தநாள் கூறி வாழ்த்து பதிவிட்டால் கூட பலரும் பதற்றத்துடனேயே பார்க்க வேண்யிருக்கிறது. எனவே சில நாட்களுக்கு யாரும் புகைப்படங்களை பதிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
கொரோனா காலத்தில் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மரணமடைந்தால் டோக்கன் வாங்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. அதற்காகவும் மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர். வைரலாகி வரும் சில மீம்ஸ்களை பார்க்கலாம்.

டீ கூட இப்படி விக்கணுமா
லாக்டவுன் காலமாக இருப்பதால் டீ கடைகள் மூடப்பட்டுள்ளன. எனவே சைக்கிளில் கேன் வைத்து சந்து சந்தாக டீ விற்று வருகின்றனர். கள்ளத்தனமாக மது விற்பது போல டீயை விற்க வேண்டுமா என்று கேட்கிறார் இந்த மீம்ஸ் பதிவர்.

யாராலடா முடியும்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க அம்மியில் அரைத்து சமைக்க வேண்டும் என்று ஒருவர் சொல்ல யாராலடா முடியும் உடம்புல தெம்பு இல்லையே என்று கண்ணீர் விடுகிறார் இந்த மீம்ஸ் கிரியேட்டர்.

போட்டோ போடாதீங்க
சமூக வலைத்தளங்களில் திருமண நாள், பிறந்த நாளுக்கு புகைப்படம் போட வேண்டாம் எந்த படம் பார்த்தாலும் பக்கென்று இருக்கிறது என்று சொல்கிறார் இந்த மீம்ஸ் பதிவர்.

மின்மயானத்திற்கு முன்பதிவு
கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ளதால் டோக்கன் சிஸ்டம் அறிமுகமாகியுள்ளது. இணையதளங்களில் மின்மயானத்திற்கு முன்பதிவு செய்ய வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காகவே இந்த மீம்ஸ்.

எப்படி பரவும்
கொரோனா முதல் அலை முடிந்து இரண்டாவது அலையில் வீரியமாக பரவி வருகிறது. கூடிய விரைவில் கொரோனா பரவல் நின்று விடும் என்று விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். மூன்றாவது அலை இததை விட வீரியமாக கூறுகின்றனர். இந்த நிலையில் கொரோனா எல்லோரும் பரவினால் எப்படி பரவும் என்று கேட்கிறார் இந்த மீம்ஸ் பதிவர்.

வலிக்காம ஊசி போடுங்க
ஊசி போட்ட மாதிரியும் இருக்கணும் ஊசி போடாத மாதிரியும் இருக்கணும் என்று பலரும் சொல்ல தடுப்பூசியை வலிக்காமல் போடுங்கள் என்று ஒருவர் சொல்ல அதற்கு நயன்தாரா ஊசியைத்தான் போட வேண்டும் என்கிறார் இந்த மீம்ஸ் கிரியேட்டர்.

நமக்காக வேண்டுபவன்
எதிரிக்கு கூட கொரோனா வரக்கூடாது என்று பலரும் வேண்டுகின்றனர். நமக்கு எதுவும் ஆகக்கூடாது என்று வேண்டும் ஒரே ஜீவன் நமக்கு கடன் கொடுத்தவர்தான் என்று பதிவிட்டுள்ளார் இந்த மீம்ஸ் கிரியேட்டர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications