Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதுல ஒண்ணுமில்ல கீழே போட்ரு.. இதைத்தான் உருட்டிக்கிட்டு இருந்தீங்களா? அண்ணாமலையை கலாய்க்கும் மீம்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பை திமுகவினரும் நெட்டிசன்கள் பலரும் கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர்.

பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வைத்தார். திமுகவினரின் சொத்து பட்டியல்கள் என்று குறிப்பிடப்படும் எக்ஸல் சீட் ஒன்றை அவர் வெளியிட்டார்.

அதேபோல் முதல்வர் ஸ்டாலின் மீதும் சில புகார்களை அண்ணாமலை பிரஸ் மீட்டில் அவர் வைத்தார். பாஜக தலைவர் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரம்தான் தற்போது தமிழ்நாடு அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் ஹாட் டாப்பிக். அவர் கையில் கட்டி இருக்கும் பெல் அண்ட் ராஸ் நிறுவனத்தின் ரபேல் வாட்ச் இந்திய மதிப்பில் 4.40 லட்சம் ரூபாய் கொண்டது.

இதற்கான பில் ஒன்றையும் அவர் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் காட்டினார். இதை அண்ணாமலை வாங்கியது எப்படி? என்ற கேள்வியைத்தான் திமுகவினர் முன் வைத்து வருகின்றனர். இதை அண்ணாமலை வாங்கிய பில்லை பொதுவில் சமர்ப்பிக்க வேண்டும் என்று திமுகவினர் அண்ணாமலைக்கு பிரஷர் போட்டு வருகின்றனர்.

இதற்கான பில்லை அண்ணாமலை இன்று காட்டினார். நேற்று இந்த பில் விவகாரங்கள் திமுக ஐடி விங் நிர்வாகிகள் மூலம் வெளியிடப்பட்ட நிலையில், இன்று அண்ணாமலை வேறு ஒரு பில்லை வெளியிட்டார். கோயம்புத்தூரை சேர்ந்த சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவரிடம் இருந்து அவர் வாட்சை வாங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, தமிழ்நாட்டில் எந்த கட்சி எல்லாம் இதுவரை ஆட்சி செய்து இருக்கிறதோ அந்த கட்சி எல்லாம் பற்றி பேசுவோம். அத்தனை கட்சிகளின் ஊழல் பற்றியும் பேசுவோம்.

லோக்சபா தேர்தலுக்கு முன் இதை பற்றி எல்லாம் பேசுவோம். அவர்கள் செய்த ஊழல்களை பற்றி பேசுவோம். நீங்கள் நினைப்பீர்கள்.. அண்ணாமலை திமுக பற்றி மட்டும்தான் பேசுவார் என்று.

இல்லை அனைத்து ஊழல் பற்றியும் நாங்கள் பேசுவோம். 2024 தேர்தலுக்கு முன் எல்லோரையும் பற்றியும் பேசுவோம். ஊழல் பற்றி பேசுவோம் என்றால் எல்லாரையும் பற்றியும் பேசுவோம் என்று அதிமுகவிற்கு எதிராகவும் அண்ணாமலை பேசி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பை திமுகவினரும் நெட்டிசன்கள் பலரும் கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர். அண்ணாமலையை கிண்டல் செய்து இவர்கள் வரிசையாக மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர். இத தான் இவ்ளோ நாள் உக்காந்து ஒட்டிட்டு இருந்தியா? என்று திமுக ஐடி விங் சார்பாக போஸ்ட் போடப்பட்டு உள்ளது.

DMK and netizens troll BJP Chief Annamalai on his pressmeet about Rafale watch and scams

அதேபோல் நேத்து வந்த பில்லுக்கு ஆடு இன்னும் வாய தொறக்கலியே!! #meh பிரண்ட்ஸ் உங்க கிட்ட இருக்க பில்லையும் அதோட விவரங்களையும் ரிப்ளைல போடுங்க.. மத்தவங்களும் தெரிஞ்சிக்கட்டும்

DMK and netizens troll BJP Chief Annamalai on his pressmeet about Rafale watch and scams

அப்போ அந்த பில்லுலையும் ஆடு பேரு இல்லையா?? லஞ்சம் இப்போ அன்பளிப்பா ஆகிடுச்சா!!

#அரசியல்கோமாளி_அண்ணாமலை, என்று திமுக ஐடி விங் போஸ்ட் செய்துள்ளது.

நெட்டிசன் ஒருவர் செய்து உள்ள போஸ்டில், இனிமேல் உன் பேரு எக்செல் ஷீட் அண்ணாமலை இல்ல, பவர்பாயிண்ட் அண்ணாமலை.. பேர மாத்திக்கோ...

DMK and netizens troll BJP Chief Annamalai on his pressmeet about Rafale watch and scams

இன்னொருவரோ, 2021 மே மாதம் சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடமிருந்து 3 லட்ச ரூபாய்க்கு வாட்ச் வாங்கினேன் - அண்ணாமலை

அதாவது மக்களே 2021 ல் ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் ஐபிஎஸ் வருமானம் மொத்தத்தையும் இழந்து கடனாளி ஆனாராம்.. ஆனா அடுத்த மாசமே 3 லட்ச ரூபா குடுத்து வாட்ச் வாங்கனாராம், என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

DMK and netizens troll BJP Chief Annamalai on his pressmeet about Rafale watch and scams

இன்னொரு நெட்டிசன் போட்டுள்ள மீமில், எதுக்கு அவரை அடிக்கிறீங்க?

இதுக்கு முன்னாடி தேசப்பற்று சேரலாதன் இராமகிருஷ்ணன் கிட்ட தான் இருந்துச்சானு கேட்கிறான், என்று கேட்டுள்ளார்.

DMK and netizens troll BJP Chief Annamalai on his pressmeet about Rafale watch and scams

அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியலில் 10 லட்சம் என்பதை 0.01 கோடி என்றெல்லாம் குறிப்பிட்டு இருக்கிறார். இதை பலரும் கலாய்த்து வருகின்றனர். இந்த நெட்டிசன் செய்துள்ள போஸ்டில், இப்ப 10லட்சம், 1லட்சம்னு போட்டா கம்மியா தெரியும்.. கண்டுக்க மாட்டாங்க.. அதயே 0.1 கோடி, 0.01 கோடின்னு போட்டா பெரிய அமவுண்ட்டா தெரியும்.. இட்ஸ் பிளிஸ்.

DMK and netizens troll BJP Chief Annamalai on his pressmeet about Rafale watch and scams

அதேபோல் இன்னொரு நெட்டிசன், அது வெறும் பவர்பாயின்ட் தான், அதுல ஒண்ணுமில்ல கீழ போட்ரு. என்று மீம் போட்டுள்ளார்.

DMK and netizens troll BJP Chief Annamalai on his pressmeet about Rafale watch and scams
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+