
பாஸ் ஆகிட்டியா.. எவ்ளோ மார்க்.. அடுத்து எந்த காலேஜ்.. வேற ஏதாச்சும் கேள்வி இருக்கா?
சென்னை: தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமல்ல.. தோல்வியடைந்தவர்களும் கெத்தாக மீசையை முறுக்குவதாக நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிப்பதில்லை என்ற தெளிவை சமீபகாலமாக அரசும், பள்ளிகளும் மாணவர்கள் தந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனால் மாணவர்கள் மத்தியில் தேர்வில் தோல்வி அடைவது ஒன்றும் வாழ்க்கையையே முடித்துக் கொள்ளும் அளவிற்கு அவ்வளவு மோசமான ஒன்றல்ல என்ற புரிதலைப் பெற்றுள்ளனர்.

ஆங்காங்கே ஒரு சில அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் சூழலிலும் பெரும்பாலானோர், 'வெற்றியும், தோல்வியும் வீரனுக்கு சகஜம்..' என்ற மனநிலைக்கு வந்து விட்டனரோ எனத் தோன்றச் செய்கிறது சமூகவலைதளங்களில் வைரலாகும் சில மீம்ஸ்களைப் பார்க்கும் போது..

இந்த மீம்ஸ்கள் தேர்வில் தோல்வியடைந்தவர்களை காயப்படுத்தும்படி இல்லாமல், அதற்குப் பதில் அவர்களே தங்களது தோல்வியை ஜஸ்ட் லைக் தட்டாக எடுத்துக் கொள்கின்றனர் என்பது போல் இருப்பது ரசிக்கும்படி உள்ளது.

இதோ அப்படியாக இணையத்தில் பகிரப்பட்டு வரும் சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக..
Recommended Video
