சும்மா சும்மா யாரும் போனை எடுத்துப் பார்க்க வேணாம்.. 1000 ரூபா அக்கௌண்ட்ல ஏறுனா நானே சொல்லுவேன்!
சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டதை வைத்து, நகைச்சுவையாக ஆயிரம் ரூபாய் பெறும் பெண்களை வீட்டில் கணவர் எப்படியெல்லாம் உபசரிப்பார்கள் என மீம்ஸ் போட்டு கலாய்ச்சிபை செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, மாதம் தோறும் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து விட்டார். செப்டம்பர் மாதம் முதல் இந்தத் திட்டம் தொடங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபோதே, எங்களுக்கு மட்டும் இல்லையா என்ற தங்களது ஏக்கத்தை மீம்ஸ் போட்டுத் தீர்த்துக் கொண்டனர் ஆண்கள்.
இப்போது திட்டமே தொடங்கியாகி விட்டது. பிறகென்ன சும்மா இருப்பார்களா? சமூகவலைதளப் பக்கங்களைத் திறந்தாலே, 'ஆயிரம் ரூபா தான்.. ஆயிரம் ரூபா தான்.. நண்பா என் தேவையெல்லாம் மாதத்துக்கு ஆயிரம் ரூபாதான்..' என மீம்ஸ் போட்டு பாட்டாகவே பாடி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...












Click it and Unblock the Notifications
