வெசம்.. வெசம்.. மகளிர் தினத்துக்கு வாழ்த்து சொல்றது பூரா வெசம்!
மகளிர் தின வாழ்த்துக்களையும், ஆண்கள் தின வாழ்த்துக்களையும் ஒப்பிட்டு ஜாலி மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை : மகளிர் தின வாழ்த்துக்களையும், ஆண்கள் தின வாழ்த்துக்களையும் ஒப்பிட்டு நகைச்சுவையான மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

வழக்கம் போலவே இந்தாண்டும் மகளிர் தினத்திற்கு தங்களுக்கு பிடித்தமான பெண்களுக்கு வாழ்த்து மழை பொழிந்து விட்டனர் பாசக்கார ஆண்கள். இதனாலேயே நேற்று சமூகவலைதளங்கள் முழுவதும் மகளிர் தின வாழ்த்து ஸ்டேட்டஸ்கள்தான் ஆக்கிரமித்திருந்தன. என்னதான் மனதார வாழ்த்தினாலும், அவர்களது மனதிலும் ஒரு ஓரத்தில் இப்படி ஆண்கள் தினத்திற்கு நம்மை யாரும் வாழ்த்துவதில்லையே என்ற ஏக்கம் உள்ளது போலும்.

எனவே, இதையே கன்டண்ட்டாக மாற்றி விட்டனர் நம் குறும்புக்கார மீமர்கள். ஆண்களின் ஏக்கத்தை கான்செப்டாக வைத்து பல மீம்ஸ்களை இன்று அள்ளிக் கொட்டி வருகின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும். கவுண்டமணி, செந்தில், வடிவேலு, சந்தானம் என நம் பிரதான காமெடியன்கள் மீம்ஸ் டெம்ப்ளேட்டுகளை வைத்து, சகட்டுமேனிக்கு மீம்ஸ்களாக பகிர்ந்து வருகின்றனர்.
ஆனால் இந்த மீம்ஸ்களிலும் ஒன்றிரண்டில் பெண்களை அவர்கள் விட்டுக் கொடுக்கவில்லை. 'நிச்சயம் ஆண்கள் தினத்திற்கு உங்களுக்கு பதிலுக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்' என பெண்கள் கூறுவது போல் சில மீம்ஸ்கள் உள்ளது ஆறுதல் ரகம். மற்றவை எல்லாம் வழக்கம்போல் ஜாலியான சரவெடிகள் தான்.

வித்தியாசமாக சிலர் ''எனக்கு ஓகே சொன்னா.. அடுத்த வருசம் நீ மதர்ஸ்டேவே கொண்டாடலாம்" என சைட் கேப்பில் மகளிர் தின வாழ்த்தோடு தங்கள் காதலையும் மீம்ஸாகப் போட்டு பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியான சில ஜாலி மீம்ஸ்கள்...












Click it and Unblock the Notifications