‘ஆரம்பிக்கலாங்களா?’.. ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும்... ராக்கிபாயை மட்டும் விட்டுடுவோமா?
சென்னை: மழை குறைந்து மீண்டும் தமிழகத்தில் வெயில் மெல்ல மெல்ல எட்டிப் பார்க்கத் தொடங்கியுள்ளதை வைத்து ஜிலுஜிலு மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
சிறிய விளம்பர இடைவேளைக்குப் பிறகு என்பது மாதிரி, அக்னி நட்சத்திரத்தில் வெயிலுக்கு சிறிய இடைவெளி கொடுத்திருந்தது மழை. ஊட்டி, கொடைக்கானல் மாதிரி அக்னி நட்சத்திரத்தில் நகரமே குளுகுளுவென குளிர்ந்து கிடந்தது.
தற்போது மழை குறைந்துவிட்ட நிலையில், மீண்டும் பழைய பன்னீர்செல்வமாக மாறி விட்டது அக்னி நட்சத்திரம். வெயில் வாட்டி வதைக்க ஆரம்பித்துள்ளதால், மக்கள் திரும்பவும் மழை பெய்யாதா என ஒருபுறம் ஏங்கிக் கொண்டிருக்க, வழக்கம் போல் இந்த வெயிலையும் மீம்ஸ் போட்டு கலாய்க்கத் தொடங்கி விட்டனர் நெட்டிசன்கள்.
உச்சத்தில் கோடை வெயில்.. அடுத்து வரும் நாட்களில் எங்கெல்லாம் மழை இருக்கு? வானிலை மையம் தகவல்
அடிக்கிற வெயிலுக்கு பத்து ஃபேன்களை சுற்றிலும் வைத்துக் கொண்டால்கூட பத்தாது போல... என பெரும்பாலான மீம்ஸ்கள் விசிறியை வைத்துதான் உள்ளன. விசிறி என்றதும் ராக்கி பாய் தானே பலரது ஞாபகத்திற்கு வருவார். எனவே மறக்காமல், ஹெலிகாப்டரையும் வைத்து ராக்கிபாயை சைடு கேப்பில் கலாய்த்துள்ளனர்.
இதோ அப்படியாக வெயிலுக்கு இதமான, சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...






