பன் வேணுமா இருக்கு.. க்ரீம் வேணுமா இருக்கு.. கிரீம்பன் வேணுமா அதுவும் இருக்கு.. ஜிஎஸ்டியும் இருக்கு!
க்ரீம் பன் விவகாரம் இணையத்தில் சூடு பிடித்ததைத் தொடர்ந்து, நம் குறும்புக்கார மீமர்களும் அதை வைத்து விதவிதமான மீம்ஸ்களைப் பகிரத் தொடங்கி விட்டனர்.
சென்னை : க்ரீம் பன்னுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும் முறை பற்றி விவாவதங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பேசுபொருளானதைத் தொடர்ந்து நம் குறும்புக்கார நெட்டிசன்களும், அதை வைத்து விதவிதமான நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

கோவையில் நடந்த கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், அன்னபூர்ணா உணவக உரிமையாளர், 'பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை.. ஆனால் பட்டருக்கு இருக்கிறது.. இதனால் பட்டர்பன் வாங்கும் வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல், உணவக உரிமையாளர்களும் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்’ என கோவைக்கே உரிய குறும்போடு கூற, அந்த வீடியோ இணையத்தில் பேசுபொருளாகியது.
அரசியல் வட்டாரத்திலும் இது ஏற்படுத்திய அதிர்வலை அடங்குவதற்குள்ளாகவே, அன்னப்பூர்ணா உணவக உரிமையாளர், மத்திய நிதியமைச்சரை தனியே சந்திந்து மன்னிப்பு கோரிய வீடியோ வெளியாகி, எரிகிற தீயில் எண்ணெய் விட்டது போல் ஆகிவிட்டது.
போதாக்குறைக்கு சைடு கேப்பில், இதையே கான்செப்ட்டாக வைத்து க்ரீம் பன் விளம்பரம் ஒன்றை நறுக், சுறுக் ஹேஷ்டேக்குகளுடன் அன்னபூர்ணா பகிர, இணையத்தில் பட்டர்பன் ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகிவிட்டது. பின்னர் அந்த வீடியோவை அவர்கள் நாசூக்காக எடிட் செய்து விட்டபோதும், நம் நெட்டிசன்கள் அதனை விடுவதாக இல்லை.
இது தொடர்பாக ஒருபுறம் காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருக்க, மற்றொருபுறம் இதனை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து, இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில பட்டர்பன் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications