‛கண் கலங்கிய காவ்யா’.. கலங்கடித்த ஸ்டார்க் ஹைதராபாத் வீழ்த்தி கேகேஆர் சாம்பியன்! டிரெண்டிங் மீம்ஸ்
சென்னை: ஐபிஎல் பைனலில் நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில் தான் இரு அணிகளுக்கு இடையிலான பைனலில் நடந்த சுவாரசியங்களை மீம்ஸாக உருவாக்கி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் கடந்த 2 மாதங்களாக ஐபிஎல் போட்டிகள் நடந்து வந்தன. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்றின் முடிவில் நடப்பு சாம்பியன் சென்னை, முன்னாள் சாம்பியன் மும்பை, குஜராத், டெல்லி, பஞ்சாப், லக்னோ உள்பட 6 அணிகள் வெளியேறின.
கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான், பெங்களூர் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பைனலுக்கு முன்னேறின. இந்த இரு அணிகளும் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இறுதி போட்டியில் மோதின.
இதில் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் இந்த சீசன் முழுவதும் அபாரமாக விளையாடிய நிலையில், இறுதி போட்டியில் கடுமையாக சொதப்பினர். சன்சைசர்ஸ் அணியின் அதிரடி வீரர்களான தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் ஷர்மா 2 ரன்களிலும் டிராவிஸ் ஹெட் கோல்டன் டக் ஆகி வெளியேறினர். அதன்பிறகு தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் அணி 18.3 ஓவரில் 113 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனை அடுத்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டகாரர் சுனில் நரைன் 6 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் குர்பாஷ் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணி 10.3வது ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கான 114 ரன்களை எட்டி சாம்பியன் பட்டத்தை வென்றது. தமிழக வீரரான வெங்கடேஷ் ஐயர் அரைசதம் அடித்தார். 26 பந்துகளில் 52 ரன்களும், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 6 ரன்களும் எடுத்து கொல்கத்தா அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இதன் மூலம் கொல்கத்தா நைட்ரஸ் சாமி மூன்றாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்நிலையில் தான் கொல்கத்தா - ஹைதராபாத் அணியின் போட்டியை மையப்படுத்தி பல மீம்ஸ்களை ரசிகர்கள் உருவாக்கி உள்ளனர். இது தற்போது வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் சில உங்களின் பார்வைக்கு. அதாவது நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்தில் நடிகர் பாலாசிங், ‛‛உன்னை போல் எத்தனை பேரை பார்த்திருப்பேன்'' என வசனம் பேசுவார். அந்த வகையில் கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் சொல்வது போல் மீம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்க் ஐபிஎல் லீக் போட்டியில் சரியாக பந்து வீசவில்லை. ஆனால் லீக் போட்டியின் இறுதியில் சில போட்டிகள் மற்றும் பிளேஆப் மற்றும் இறுதி போட்டியில் சிறப்பாக பந்து வீசினார். இன்று நடந்த போட்டியில் ஸ்டார்க் 3 ஓவர்களில் 14 ரன்கள் விட்டு கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். குறிப்பாக அந்த அணியின் தொடக்க வீரர் அபிசேக் சர்மா மற்றும் திரிபாதி ஆகியோரின் விக்கெட்டை அவர் கபளீகரம் செய்தார். இந்நிலையில் தான் ஸ்டார்க் ‛‛எவ்ளோ பார்த்திருப்பேன்'' எனக்கூறுவது போல் மீம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நடிகர் சத்யராஜ், அவரது மகன் சிபிராஜ் , நடிகர் வடிவேலு நடித்த திரைப்படம் கோவை பிரதர்ஸ். இதில் சத்யராஜ், வடிவேலு ஆகியோரின் அணிக்கும் சிபிராஜ் அணிக்கும் கிரிக்கெட் போட்டி நடக்கும். இதில் சத்தியராஜ் அணி மோசமான நிலையில் இருக்கும். அப்போது வடிவேலு தலையில் கை வைத்தபடி இருப்பார். அவர் அருகே இன்னொரு நடிகையும் தலையில் கைவைத்து சோகத்துடன் இருப்பார். அந்த டெம்பிளேட்டை சன்சைசர்ஸ் ஹைதரபாத் அணியின் உரிமையாளர் காவ்யா சோகத்துடன் இருப்பது போன்ற போட்டோவுடன் இணைத்து மீம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுவாக வழக்கத்தில் If you are bad then i am your Dad எனக்கூறுவது உண்டு. அந்த வகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா கேப்டனாக உலககோப்பை போட்டியில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். ஆனால் பேட் கம்மின்ஸை தலைமையிலான அணியை இன்றுகொல்கத்தா வீழ்த்தி உள்ளது. இதனை குறிப்பிடும் வகையில் பேட் கம்மின்ஸ் மற்றும் கொல்கத்தா அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீரை சேர்த்து வைத்து மீம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் கம்மின்ஸ் போட்டோ அருகே ‛If you are bad' எனவும், கொல்கத்தா அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் போட்டோ அருகே ‛then i am your Dad' எனவும் எழுதப்பட்டுள்ளது.

அதேபோல், உலககோப்பை போட்டியில் அகமதாபாத்தில் 1 லட்சம் இந்திய ரசிகர்களை சைலன்டாக்கி இந்தியாவை வீழ்த்தி பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்தார். ஆனால் இன்றைய போட்டியில் பேட் கம்மின்ஸ் சைலன்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான கிரெடிட்டை கொல்கத்தா ரசிகர்கள் அந்த அணியின் ஆலோசகர் கம்பீருக்கு கொடுத்துள்ளார். இதனை குறிப்பிடும் வகையில், ‛ தி ரியல் சைலன்சர்' என கம்பீரின் போட்டோவுடன் மீம் உருவாக்கி உள்ளனர். மேலும் இதுபோன்று பல மீம்கள் வலைதளங்களில் பரவி வருகிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications