புஜுக்கு புஜுக்கு புஜுக்கு.. ஸ்டாலின் கன்னமும், களை கட்டும் மீம்ஸும்!
கிருஷ்ணகிரியில் ஸ்டாலின் கன்னத்தை பெண் ஒருவர் கிள்ளியது மீம்ஸ்களாக வெளிவந்துள்ளது.
சென்னை: உச்சி வெயில் மண்டையை பிளந்தாலும், மீம்ஸ்களை உருவாக்க மட்டும் யாருமே சோடை போவதில்லை.. விதவிதமான மீம்ஸ்கள் இணையத்தில் ரவுண்டு கட்டி வருகின்றன! அதில் ஒன்று திமுக தலைவர் முக ஸ்டாலின் பற்றின மீம்ஸ்தான்!
இப்போதெல்லாம் தலைவர் டீ-ஷர்ட், டிராக்சூட் என "வாக்கிங்-டாக்கிங்-வோட்டிங்" என இறங்கிவிட்டார். பார்ப்பதற்கு அப்படியே "நமக்கு நாமே" திட்டத்தின் பார்ட்-2 போல உள்ளது!
மக்களிடம் கேஷூவலாக ஸ்டாலின் பேசுவதும், அவர்களுக்கு கைகுலுக்கி செல்வதும், சளைக்காமல் அவர்களுடன் செல்பி எடுத்து தள்ளுவதும் என கலக்கி வருகிறார்.

கன்னத்தை கிள்ளுகிறார்
கிருஷ்ணகிரியில் இப்படித்தான் பிரச்சாரம் செய்துவிட்டு, ஒரு டீக்கடையில் வந்து உட்காருகிறார். அங்கே ஒரு பெண்மணி ஸ்டாலின் கன்னத்தை பிடித்து கிள்ளுகிறார். கையில் சூடாக டீ கிளாஸ் வைத்து கொண்டிருந்த ஸ்டாலினோ வெட்கத்தில் சிரிக்கிறார்.

வைரல் மீம்ஸ்
இந்த போட்டோ இணையத்தில் வைரலாகியது. இதை பார்த்ததும் நம்ம ஆட்களுக்கு ஒரு மீம் ஞாபகத்துக்கு வந்துவிட்டது போலும்! அதுவும் வடிவேலுவின் காமெடியை நினைத்து!

வடிவேலு
"வெற்றிவேல் சக்திவேல்" படத்தில் வடிவேலுவின் கன்னத்தை பிடித்து சத்யராஜ் செல்லமாக கிள்ளி "புஜூக் புஜூக்" என்று சொல்வார். இதை கொண்டு போய் ஸ்டாலின் கன்னத்தை பிடித்த இமேஜூடன் இணைத்து விட்டார்கள்.

வைரல் சம்பவம்
ஒரு பக்கம் வடிவேலு கன்னத்தை சத்யராஜ் கிள்ள, இன்னொரு பக்கம் ஸ்டாலின் கன்னத்தை அந்த பெண் கிள்ள.. என பார்க்கவே "புஜூக்.. புஜூக்" நினைப்புதான் வருகிறது! இதை வைத்து எதுவும் தவறாக சித்தரிக்கவில்லை என்றாலும், ஸ்டாலின் கன்னத்தை ஒரு பெண் கிள்ளியது அவ்வளவு வைரலாகிவிட்டது!












Click it and Unblock the Notifications