அட சத்தியமா எனக்கு கோவமெல்லாம் வராதுங்க!
கணவன், மனைவி வாழ்க்கை ஒரு படம் மாதிரி. அதில் ரொமான்ஸும் இருக்கும், காமெடியும் இருக்கும், சண்டையும் இருக்கும். சந்தோஷமாக வாழ்கிறார்களா இல்லையா என்பது பெரிய விஷயம் அல்ல. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் கணவன்மார்கள் மனைவிக்கு பயந்து வாழ்வது போலவே வெளி உலகில் காண்பித்து கொள்கிறார்கள்.
இப்படி இருந்தாலும், ஒரு பக்கம் நண்பர்கள் கூட்டத்தில் "எங்க வீட்ல எல்லாம் நான் தான்டா கெத்து" என்று பெருமையாக சொல்லி கொண்டாலும் சிலர் வீட்டில் பெண்கள் தான் நிஜமாகவே கெத்தாக இருப்பார்கள்.
அதுமட்டுமில்லை ரிமோட் மனைவியின் கையில், மெனு கார்ட் மனைவியின் முடிவு, பணம் செலவு செய்யும் லிஸ்ட் கூட அவங்க அப்பருவல் தான் தேவைப்படுகிறது. யாராவது நண்பர் வீட்டுக்கு போய் "மச்சி, ரொம்ப நாளாச்சே ஒரு டூர் போகலாம்" என்றால், அவங்க முதல் பதில் "சரி, நான் வீட்டுல கேட்டு சொல்றேன்!" என்று கூறிவிட்டு மனைவியின் கண் அசைவுக்கு காத்திருக்கிறார்கள்.

இந்த கதையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், சில வீடுகளில் ஆண்களின் ஆதிக்கம் தலைவிரித்து ஆடத்தான் செய்கிறது. அங்கே மனைவிகள்தான் கணவனின் வார்த்தைக்குக் காத்திருக்கிறார்கள். ஆகையால் கணவனோ மனைவியோ ஒருவருக்கு ஒருவர் இங்கு குறைந்தவர்கள் இல்லை. முக்கியமாக மனைவியிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் கணவன்கள் சமூக வலைத்தளங்களில் புலம்பி வருகிறார்கள்.





















Click it and Unblock the Notifications