For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Memes: சென்னை டாஸ்மாக்ல கூட்டம் குறைவாமே.. மக்கள் திருந்திட்டாங்களா!.. வீக் என்ட்காக வெயிட்டிங்கா!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குறைவாக இருக்கிறதாமே. ஒரு வேளை மக்கள் திருந்திட்டாங்களா இல்லை வீக் என்ட்டிற்காக வெயிட்டிங்கா என மீம்ஸ்கள் தெறிக்கவிடுகின்றன.

சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் தொடங்கப்பட்டன. 720 கடைகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் காலையிலேயே குடிக்காரர்கள் குளித்துமுடித்துவிட்டு ஏதோ புது படம் ரிலீஸ் போல அதிகாலையிலேயே கடை முன்பு குவிந்தனர்.

காரணம் 500 டோக்கன்கள்தான் கிடைக்கும் என்பதால், 500-இல் ஒருவனாக இருக்க விரும்பி முந்தியடித்தனர். இது தொடர்பாக பல மீம்ஸ்களை நாம் பார்ப்போம்.

எட்டுமணிக்கே க்யூல நின்னு... பூசணி சுத்தி தேங்காய் உடைச்சு... சென்னையில் டாஸ்மாக் ஓபன் எட்டுமணிக்கே க்யூல நின்னு... பூசணி சுத்தி தேங்காய் உடைச்சு... சென்னையில் டாஸ்மாக் ஓபன்

டாஸ்மாக்ல கூட்டம்

டாஸ்மாக்ல கூட்டம்

உண்மையிலேயே சென்னை டாஸ்மாக்ல கூட்டம் குறைவாதான் இருக்கு. மக்கள் திருந்திட்டாங்களா இல்லை வீக்எண்ட்க்காக வெயிட்டிங்கா

வாய், உணவு குழாய்

வாய், உணவு குழாய்

'குடி'மக்களின் வாய் மற்றும் உணவு குழாயை தூய்மையாக வைத்திருக்க உதவுங்கள். #Tasmac

சாராயம்

சாராயம்

குடிகாரனுங்க சாராயம் வாங்க வரிசையில நிக்கிறானுங்கன்னு சொல்லவேண்டியதுதான...
அது என்ன? "மதுப்பிரியர்கள்"
உங்க மரியாதைக்கு அளவே இல்லையா??
#TASMAC

ரேஷன்

ரேஷன்

மக்கள் நிழலில் நின்று சரக்கை வாங்கிச் செல்ல வேண்டும் என்பதற்காக ஷாமியானா பந்தல் போட்டுள்ளது தமிழக அரசு. ஆனால் ஏழை மக்கள் ரேஷன் வாங்க செல்லும் போது கொளுத்தும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் நின்று வாங்க வேண்டியுள்ளது.

 இ பாஸ்

இ பாஸ்

#TASMAC சென்னைக்கு போனால் சரக்கு கிடைக்காதுணு சொந்த ஊரிலேயே செட்டில் ஆன குடிமகன்கள் இந்நேரம் சென்னைக்கு கிளம்பியிருப்பாங்க. அதற்கு வசதியா இ - பாஸ்யும் ஈஸி பண்ணிட்டாங்க. #TASMAC

English summary
Netisans shared their comments about Tasmac shops opened in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X