சென்னையில் திடீர் வெயில்.. மேடம் இது நடிப்பு மேடம்.. பின்னாடி பெரிய புயலே வருது.. டிரெண்டான மீம்ஸ்
சென்னை: சென்னையில் நேற்று இரவு பெய்த கனமழையை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
நேற்று காலையில் இருந்து சென்னையில் விடாமல் கனமழை பெய்து வருகிறது. புயல் சின்னம் காரணமாக சென்னையில் மழை அடித்து துவைத்துக்கொண்டு இருக்கிறது.

இதனால் சென்னையில் மழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று 20 இடங்களுக்கும் மேற்பட்ட பகுதிகளில் 100 செமீக்கும் அதிகமாக மழை பெய்தது. சென்னையில் இரவு முழுக்க மழை பெய்தாலும் இப்போது பல இடங்களில் வெயில் அடித்து வருகிறது. அதோடு மழை காரணமாக தேங்கிய தண்ணீர் வேகமாக வடிந்து வருகிறது.
புயல் சின்னம்: கடந்த 27-11-2023ம் தேதி காலை 08.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து 28-11-2023 காலை 08.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இதுதான் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலிமை அடைந்தது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 30-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போதைய நிலவரம்; சென்னை மழைக்கு இடையே மாநகராட்சி துரித நடவடிக்கையால் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை. சென்னையில் உள்ள 22 போக்குவரத்து சுரங்கப்பாதைகளிலும் 21 சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

துரிதமான நடவடிக்கை; மழையினால் சரிந்த 12 மரங்களும் துரிதமாக அகற்றப்பட்டு உள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. சிசிடிவி கேமராக்கள் மூலம் சுரங்கப்பாதைகளில் தொடர் கண்காணிக்கப்பட்டு வருகிறது. லேசாக மழைநீர் தேங்கிய 41 இடங்களில், 31 இடங்களில் மழைநீர் முழுமையாக வடிந்தது- சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
மீம்ஸ்; இதை எல்லாம் கிண்டல் செய்து மீம்ஸ் போட்டு வருகின்றனர். சாலையில் தண்ணீர் இருப்பது, துணி காய வைக்க முடியாமல் போனது.. விட்டு விட்டு மழை புரட்டி எடுப்பதை கிண்டல் செய்துள்ளனர்.

அதோடு டிசம்பர் 1ம் தேதி இது புயலாக மாறும். அதன்பின் இது தீவிர புயலாக மாறி.. பின்னர் டிசம்பர் 2-3ம் தேதிகளில் அதி தீவிர புயலாக மாறும். பெரும்பாலும் இந்த சமயத்தில் புயல் நகர்ந்து நகர்ந்து டிசம்பர் 4ம் தேதி சென்னைக்கு கிழக்கு பகுதிக்கு வரும்.

இந்த புயல் சென்னைக்கு எவ்வளவு அருகே வருகிறது என்பதை பொறுத்தே இந்த புயல் காரணமாக சென்னையில் எவ்வளவு மழை பெய்யும் என்பது தெரியும். இந்த புயல் பெரும்பாலும் தெற்கு ஆந்திர பிரதேசத்தில் காவாலி அருகே தீவிர புயலாக கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன. டிசம்பர் 4ம் தேதி மாலை அல்லது இரவில் இது கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன, என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

என்னதான் இப்போது வெயில் அடித்தாலும் விரைவில் கண்டிப்பாக புயல் அடிக்கும் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications