தொண்டர்கள் வெள்ளத்தில் ஈரோடு திமுக மண்டல மாநாடு.. போட்டோ ஷேர் செய்து மகிழும் நெட்டிசன்கள்

ஈரோட்டில் நடைபெற்று வரும் திமுக மண்டல மாநாடு தொண்டர்கள் வெள்ளத்தால் மிதக்கிறது. ஈரோடு மாநாட்டு புகைப்படங்கள், வீடியோக்களை நெட்டிசன்கள் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    திமுக மண்டல மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது

    சென்னை : ஈரோட்டில் நடைபெற்று வரும் 2 நாள் திமுக மாநாடு தொண்டர்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது. மாநாட்டு புகைப்படங்கள், வீடியோக்களை நெட்டிசன்கள் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சரளை பகுதியில் திமுக சார்பில் மண்டல மாநாடு நடைபெறுகிறது. திமுக செயல் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, மு.க.ஸ்டாலின் பங்குபெறும் முதல் மாநாடு என்பதால் மாநாட்டுக்கான தொண்டர்கள் கூட்டம் மெர்சலாக்குகிறது.

    1.50 லட்சம் சதுர அடியில் பந்தல், ஒரு லட்சம் நாற்காலிகள், கோட்டை போன்ற முகப்பு தோற்றம், புகைப்படக் கண்காட்சி என பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது திமுக மாநாடு. மாநாட்டு தொடக்க விழாவில் பங்கேற்க வந்துள்ளவர்கள் மாநாட்டுத்திடல், தொண்டர் படை, உற்சாகமாக பங்கேற்றுள்ளவர்கள் என பல சுவாரஸ்யமான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அவற்றில் சில சுவாரஸ்யமான ட்விட்டர் பதிவுகள் இதோ.

    ஜனநாயக கட்சியின் மாநாடு

    சரியான நேரத்தில் தமிழகத்தில் நடக்கும் மிகப்பெரிய அரசியல் மாநாடு என்று ட்வீட்டியுள்ளார் இவர். இது ஏதோ ஒரு கட்சியின் மாநாடு போல இல்லாமல், தமிழகத்தின் மிகப்பெரிய ஜனநாயக கட்சியின் மாநாடு என்பதை நிரூபிக்கின்றனர் தொண்டர்கள் என்றும் இவர் மகிழ்ந்துள்ளார்.

    உயிர்நாடித் தொண்டர்கள் மாநாடு

    ஈரோடு திமுக மாநாட்டிற்கு வயது வித்தியாசமின்றி கட்சியினர்அலைகடலென திரண்டு வருகின்றனர். அதற்கான உதாரணம் தான் இந்த புகைப்படம். திமுகவின் உயிர்நாடி தொண்டர்களின் மாநாடு திராவிட முன்னேற்றக் கழகம் ஈரோடு மண்டல மாநாடு!! என்று மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார் இவர்.

    ஈரோடு துவக்க உரை எழுதட்டும்

    நாடு வளம் பெற, நலிந்தோர் வாழ்வு நலம் பெற. அன்னைத்தமிழகத்தில் இன்னல் தீர்ந்து இன்பம் பெற்றிட ஈரோடு துவக்கவுரை எழுதட்டும் என்று பகிர்ந்துள்ளார் இவர்.

    இளைஞரணி மாநாட்டை விட மாஸ்

    இளைஞரணி மாநாட்டில் கூட இவ்வளவு இளைஞர்கள் கூடியிருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். திமுகவுக்கான அடுத்த 50 ஆண்டுகளுக்கு தேவையான பலத்தையும் வடிவத்தையும் அமைத்துக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின் என்று ட்வீட்டியுள்ளார் இந்த வலைபதிவர்.

    மேடையே கண்ணுக்கு தெரியல

    ஈரோடு திமுக மாநாட்டில் பிரம்மாண்டத்திற்கு பஞ்சமே இல்லை. இந்த போட்டோவை போட்டு சந்தோஷ மிகுதியில் இப்படி ட்வீட்டியுள்ளார் இந்த நெட்டிசன். அடேய் மாநாட்டு மேடை எங்க டா, அதெல்லாம் 2 கிலோமீட்டர் தாண்டி இருக்கு தம்பி.

    உள்ளூர் மக்களுக்கு சிறப்பு ஏற்பாடு

    நாங்க அரசியல் பழக ஆசையா வாருங்கள் ஈரோடு, மூன்று மாதம் மாநாட்டு ஏற்பாடுகளுக்கு உதவி புரிந்த உள்ளூர் வாசிகளை கவுரவிக்கும் விதமாக விஐபி வரிசைக்கு அருகிலேயே உள்ளூர் மக்களுக்கான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதை இவர் சுட்டிக்காட்டியுள்ளார். திமிராவே சொல்லுவேன் திமுகடா என்று சிலாகிக்கிறார் இவர்.

    வேற லெவல்

    ஈரோடு திமுக மண்டல மாநாட்டை குறும்படமாக போட்டு ஓட்டியுள்ளார் இந்த தொண்டர். வேற லெவல் செம்ம ஆள போறான் தமிழன் என்று உற்சாகமாக பகிர்ந்துள்ளார் இந்த வலைபதிவர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+