5 நாள் பரோல்ல 30 நிமிடம் தான் கணவர் நடராஜனுடன் இருந்தாரா சசிகலா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பரோலில் வெளியே வந்துள்ள சசிகலாவை கலாய்த்து சமூக வலைதளங்களில் கருத்துகள் குவிந்து வருகின்றன.

சசிகலாவின் கணவர் நடராஜன் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். கணவர் நடராஜனை காண சசிகலா 5 நாள் பரோலில் வந்துள்ளார்.

தி நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ள அவர் தினமும் கணவரை சென்று பார்த்து வருகிறார். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கணவருடன் இருக்க சிறை நிர்வாகம் அனுமதித்திருக்க அவர் 30 நிமிடம், ஒரு மணி நேரம், 2 மணி நேரம் என திரும்பி விடுகிறார். இதனை நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கியுள்ளனர்.

30 நிமிடம் தான் இருந்தாரா?

நடராஜன் உடல்நிலையில் முன்னேற்றம்; சசிகலா 30 நிமிடம் உடன் இருந்து கவனித்தார். 5 நாள்பரோல்ல 30 நிமிடம் தான் உடன் இருந்தாரா? என கேட்கிறார் இந்த நெட்டிசன்

அதையும் சொல்ல வேண்டியது தானே

நடராஜன் உடல்நிலையில் முன்னேற்றம்;சசிகலா 30 நிமிடம் உடன் இருந்து கவனித்தார் வழக்கமா போடுற இட்லி சாப்பிட்டார் அதையும் சேர்த்து போடவேண்டியது? என்கிறது இந்த டிவிட்

அரசியல் மாற்றம் எதுவும் ஏற்படாது

அரசியல் மாற்றங்கள் கூவத்தூரிலேயே முடிந்துவிட்டது", அம்மையார் சசிகலா வந்திருப்பதால் அரசியல் மாற்றம் எதுவும் ஏற்படாது... என்கிறது இந்த டிவிட்

மவுன விரதம் போல

நடராசனை காப்பாத்த எடுத்த முயற்சிகூட ஜெ.வுக்கு சசிகலா எடுக்கவில்லை.-ஜெயகுமார்#அந்த 75 நாள் மௌன விரதம் போல... என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்

கடுமையான நிபந்தனை தவறுதான்

சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை கடுமையானது-எம்.எல்.ஏ கருணாஸ் ###ஆமாம்-சசிகலா என்ற விடுதலை போராட்ட தியாகிக்கு கடுமையான நிபந்தனை தவறு தான்... என கிண்டலடிக்கிறார் இந்த வலைஞர்

கருணாஸை கலாய்த்து டிவிட்

சசிகலா பரோலுக்கு விதிக்கப்பட்ட விதிகள் ஆச்சரியம் அளிக்கிறது: கருணாஸ் எம்எல்ஏ நீங்களெல்லாம் எம்எல்ஏ ஆனது பேரச்சரியம்... என்கிறார் இந்த நெட்டிசன்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens making fun of Sasikala on social media. Sasikala has come out on parole for five days.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற