For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அவசரப்பட்டு தற்கொலை பண்ணிக்காதீங்க குரு...! ஜக்கி வாசுதேவ்வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தை கண்டித்தும் ஆலைக்கு ஆதரவாகவும் ட்விட்டரில் கருத்து தெரிவித்த ஜக்கி வாசுதேவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தை கண்டித்தும் ஆலைக்கு ஆதரவாகவும் ட்விட்டரில் கருத்து தெரிவித்த ஜக்கி வாசுதேவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

ஸ்டெர்லைட் போன்ற மிகப்பெரிய தொழில்களை அடித்துக்கொல்வது என்பது பொருளாதார தற்கொலை என ஜக்கி வாசுதேவ் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

அவருக்கு நடிகர் சித்தார்த் ட்விட்டரில் பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ஜக்கி வாசுதேவை கலாய்த்தும் நடிகர் சித்தார்த்தை பாராட்டியும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தப்பை தட்டிக்கேட்கிறார்

ஜக்கி வாசுதேவுக்கு நடிகர் சித்தார்த் பதிலடி; தூத்துக்குடியில் மக்களை போலீஸார் கொன்றதை பேசும் நேரம் இது: ட்விட்டரில் கோபம்
"நிறைய விஷயங்களில் தப்பை தட்டிக்கேட்கிறார் நடிகர் #சித்தார்த்
வெல்டன் பிரோ"

கொந்தளித்த சித்தார்த்

பாபா ராம்தேவை தொடர்ந்து, ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவாக ஈஷா ஜக்கி வாசுதேவ் போட்ட ட்விட்டர்க்கு, தாமிரத்தின் தேவையை பற்றி பேசாமல் கொல்லப்பட்ட மனிதர்களை பற்றி பேசுங்கள் என கொந்தளித்த நடிகர் சித்தார்த்.

பாதிக்கப்பட்டோர் சங்கம்

தொழிற்சாலைகளை மூடுவது பொருளாதார தற்கொலை
- ஜக்கி வாசுதேவ்
ஸ்டெர்லைட் மூடியதால் பாதிக்கப்பட்டோர் சங்கம்

ஆன்மீக வியாபாரி

//காப்பர் உருக்காலை போன்ற பெரும் வியாபாரத்தை முடக்குவது பொருளாதார தற்கொலை // - 'ஆன்மீக வியாபாரி' ஜக்கி வாசுதேவ்
#பொருளாதாரம் தானாக தற்கொலைக்கு முயல்வதில்லை. அதிகப்பிரசங்கித்தனமான அதிமேதாவிகளாக நினைத்துக் கொள்ளும் அரசியல் கோமாளிகளே பொருளாதாரத்தை தூக்கு மேடையில் ஏற்றுகிறார்கள்!

தற்கொலை பண்ணிக்காதீங்க

ஸ்டெர்லைட் போன்ற மிகப் பெரிய தொழில்களை அழித்துக் கொல்வது என்பது பொருளாதார தற்கொலையாகும் - சத்குரு ஜக்கி வாசுதேவ் # அவசரப்பட்டு தற்கொலை பண்ணிக்காதீங்க குரு...

English summary
Netizens sharing their views about Jakki Vasudev and Actor sidarth. Jakki was supporting sterlite. Sidarth condemns Jakki through on Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X