போன வருஷம் பசுவுக்காக .. இந்த வருஷம் பஸ்க்காக.. நெட்டிசன்ஸ் கலாய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளிகளுக்கு நாளை முதலே பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் 8வது நாளாக இன்றும் மிகக்குறைந்த அளவே அரசுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்கு எப்படி ஊருக்கு செல்வது என மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நாளை முதலே பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

பள்ளி பேருந்து ஓட்டுநர்களை வைத்து அரசுப் பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டிருப்பதாக கூறி சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அவற்றில் சில..

கண்டுகொள்ளுமா அரசு

8வது நாளாக நீடிக்கும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம். இனியும் கண்டுகொள்ளுமா தமிழக அரசு.

எப்படி ஹெலிகாப்டர்ல?

இங்க பஸ் ஸடிரைக், அங்க அவங்க எப்படி ஹெலிகாப்டர்ல பறக்கலாம்ங்கிறது...!!
எல்லையில் நம் ரானுவ வீரர்கள்..!பதாகைகளுக்கு சமானம்

ரெடி பண்ணிட்டாரு..

பொங்கலை சிறப்பாக கொண்டாட ஜனவரி 12 முதல் மாணவர்களுக்கு விடுமுறை - தமிழக அரசு
ஆக பஸ்சை ஓட்ட பள்ளி பேருந்து ஓட்டுநர்கள ரெடி பண்ணிட்டாரு எடப்பாடி

குடும்பத்தோடு பொங்கல்

அனேகமா இந்த வருஷம் தான் பேருந்து தொழிலாளர்கள் பொங்கலை தங்கள் குடும்பத்துடன் கொண்டாடுவார்கள்.... அவர்களுக்கும் பொங்கல் கொண்டாட ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது இந்த அம்மாவின் வழியில் செயல்படும் அரசு... சிறப்பு..

இந்த வருஷம் பஸ்க்காக

போன வருஷம பசுவுக்காக போராடுனாங்க.. இந்த வருஷம் பஸ்க்காக போராடுறாங்க..

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens sharing their views on govt annouce holiday for schools from tomorrow. Bus strike is continues as 8th day due to this govt plans to use school bus drivers to operate govt buses.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற