நாற்காலியை காப்பாற்ற தான் அரசு தயாராக இருக்கிறது... மக்களை காப்பாற்ற அல்ல... கொதிக்கும் நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு மக்களை காப்பாற்ற அக்கறை காட்டவில்லை என நடிகர் கமல்ஹாசனின் டிவிட்டுக்கு மக்கள் பதில் தெரிவித்து வருகின்றனர்.

சென்னையின் தென்மேற்கு வடமேற்குப் பகுதிகள் நீாில் மூழ்கத் தயாராகிக் கொண்டு இருக்கின்றன என்று நடிகர் கமல் எச்சரித்துள்ளார்.

இது அரசுக்கும் மக்களுக்கும் கொடுக்கப்படும் முன்னறிவிப்பு. உடனே செயல் பட்டால் வருமுன் காப்பதாகும். எனக்கு வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன என்று கமல் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கமலின் இந்த டிவிட்டுக்க வரவேற்பு தெரிவித்துள்ள மக்கள் அரசு மக்களை காப்பாற்ற அக்கறை காட்டவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.

இரட்டை அர்த்தம்

மக்களுக்கு கொடுக்கப்படும் முன்னறிவிப்பு.. (இரட்டை அர்த்தம்) என டிவிட்டியுள்ளார் இந்த நெட்டிசன்..

வேடிக்கை பாக்குறாங்க

வேடிக்கை பார்க்க வேண்டியவங்க களத்தில இறங்குறாங்க களத்தில் இறங்க வேண்டியவங்க வேடிக்கை பாக்குறாங்க.. என்கிறது இந்த டிவிட்

நிலவில்லை மடிப்பாக்கம் சாலை

நிலவில் மனிதர்கள் நடமாடுவதாக நாசா கண்டுபிடித்தது
பின்னர் அது நிலவில்லை மடிப்பாக்கம் சாலை என சென்னை மாநகராட்சி உறுதி செய்தது.. என கிண்டலடிக்கிறார் இந்த வலைஞர்

மக்களிடம் செல்ல வேண்டும்

எனது கருத்தை படிப்பீர்களா என்று தெரியாது.. நீங்கள் இங்கே பதிவேற்றம் செய்வதோடு நிறுத்தாமல் அங்கு உள்ள மக்களிடம் நேரடியாக சொல்ல வேண்டும்... என கூறுகிறார் இந்த வலைஞர்

மக்களை காப்பாற்ற அல்ல

நாற்காலியை காப்பாற்ற தான் அரசு தயாராக இருக்கிறது... மக்களை காப்பாற்ற அல்ல... என டிவிட்டியுள்ளார் இந்த நெட்டிசன்

மக்களுக்கு சிறந்தது..

அரசுக்கு அறிவிப்பு கொடுப்பது வீண். நம் மக்களுக்கு அறிவிப்பு கொடுப்பது சிறந்தது.. என்கிறது இந்த டிவிட்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens welcomes Kamal tweet and accusing govt for not taking prevention.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற