For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"அது எவன்டா.. கடலா, புயலா, இடியா மழையா என்னை ஒன்றும் செய்யாதடினு ஸ்டேட்டஸ் வச்சது?" நச் நிவர் மீம்ஸ்

நிவர் புயல் மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன

Google Oneindia Tamil News

சென்னை: "ஒரு வருஷத்துல ஒரு பிரச்சனை வந்தால் பரவாயில்லை, ஒரு வருஷமே பிரச்சனையா வந்தா என்ன பண்றது" என்பன போன்ற மீம்ஸ்கள் நிவர் புயலை மையப்படுத்தி இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.

அரபிக் கடலில் உருவான கதி புயல், சோமாலியா நோக்கி பயணித்தாலும், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் நிவர் புயலாகி, தமிழகத்தையும், புதுச்சேரியிலும் தாக்கத்தைச் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வழக்கமாக எந்த ஒரு நிகழ்வுகளுக்கும் மீம்ஸ் உருவாக்கும் நெட்டிசன்கள் இந்த புயலையும் விட்டு வைக்கவில்லை.. முன்பெல்லாம், மகிழ்ச்சிகரமான, காமெடி விஷயத்துக்குதான் மீம்ஸ்கள் ரெடியாகும். இப்போது அப்படி இல்லை.

 கொரோனா

கொரோனா

சீரியஸ் விஷயத்திற்கும் மீம்ஸ்கள் தயார் செய்துவிடுகிறார்கள். இதற்கு காரணம், அலட்சியம் இல்லை, அந்த சீரியஸ் விஷயத்தையும் கடந்து செல்லும் ஒரு வழிவகையாகவே மீம்ஸ் பார்க்கப்படுகிறது. அதனால்தான் கொடூர கொரோனாவிலும் நெட்டிசன்கள் பிரித்து மேய்ந்தனர்.. இப்போது இந்த நிவர் புயலை மையமாக வைத்து 2 நாட்களாகவே சோஷியல் மீடியா முழுவதும் மீம்ஸ்கள் நிறைந்து வழிகின்றன.. அதில் ஒரு சிலதான் இவை:

 கிளைமேக்ஸ்

கிளைமேக்ஸ்

வழக்கமாக வருட கடைசியில் ஏதாவது ஒரு இழப்பில் நாம் சிக்கி கொள்கிறோம்.. குறிப்பாக டிசம்பர் மாதம் என்றாலே நடுநடுங்கி போகிறோம்.. அந்த வகையில் ஒரு மீம் வெளிவந்துள்ளது. அதில், "தல மழை வந்துட்டு, அடுத்த புயல் வர போது, ஒருவழியா 2020 கிளைமேக்ஸ்க்கு வந்துட்டோம்" என்கிறது ஒரு வடிவேலு மீம்.

 வடிவேலு

வடிவேலு

நான் நினைச்சா வலுவிழந்து ஒரிசா பக்கம் போயிடலாம்., ஆனால் நினைக்க மாட்டேன் என்கிறது ஒரு சூர்யா மீம்... "அது எவன்டா கடலா புயலா இடியா மழையா என்னை ஒன்றும் செய்யாததடினு ஸ்டேட்டஸ் வச்சது? என்று வடிவேலு கேட்பது போல" மற்றொரு மீமை தெறிக்க விட்டுள்ளனர்.

பிரச்சனை

பிரச்சனை

சென்னையில் அன்று பெருத்த வெள்ளம் வந்ததை நினைவுகூரும் வகையில், தீப்பொறி திருமுகம் ரப்பர் டியூப்புடன் அலர்ட்டாக படுத்து தூங்குவது போல ஒரு மீம் உள்ளது.. அதேபோல, "ஒரு வருஷத்துல ஒரு பிரச்சனை வந்தால் பரவாயில்லை, ஒரு வருஷமே பிரச்சனையா வந்தா என்ன பண்றது" என்று கேட்கிறது மற்றொரு மீம்..

தமிழகத்தில்

தமிழகத்தில்

தமிழகத்தில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னம் உருவாகி உள்ளது என்ற அறிவிப்புக்கு, "ஒரு புயல் வரும்போதே யாரும் நிவாரணம் தர வர மாட்டாங்க. இதுல இரண்டு புயல் சேர்ந்து வேற வருதா?" என்று வடிவேலு இன்னொரு மீம்ஸில் கண்ணீர் வடிக்கிறார்.

 வைரல்

வைரல்

மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று நம் அரசாங்கம் சொன்னதையடுத்து, மக்கள் இதுபோன்ற மீம்ஸ்களை வீட்டிற்குள் பாதுகாப்பாக இருந்தபடியே, சிதறடிக்கும் வேலையில் சோஷியல் மீடியாவில் இறங்கி உள்ளதாகவே தெரிகிறது.

English summary
Nivar cyclone troll 2020 climax memes viral on Socials
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X