போலீஸ்காரன கட்டிக்கிட்டா .. எப்படிப்பட்ட வரிகள்.. நெட்டிசன்கள் வெளியிட்ட புது கண்டுபிடிப்பு பாருங்க
சென்னை: போலீஸ்காரன கட்டிக்கிட்டா லத்திய வச்சு அடிப்பான்... டாக்டரை நான் கட்டிக்கிட்டா ஊசியால் குத்துவான்.. என்று ஒரு பாடல் 'ஜாலியோ ஜிம்கானா' படத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தை இங்கிலீஸ்காரன், சார்லி சாப்ளின் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ஷக்தி சிதம்பரம் இயக்கினார். இப்படத்தின் பாடல் 1983ம் ஆண்டு வெளியான சிவப்பு சூரியன் பாடலை போன்று இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இங்கிலீஸ்காரன், சார்லி சாப்ளின் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான படம் 'ஜாலியோ ஜிம்கானா'. இதில் பிரபுதேவா, மடோனா செபாஸ்டின், அபிராமி, யாஷிகா ஆனந்த், யோகி பாபு, ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்திருந்தார்கள். டிரான்ஸ் இந்தியா மீடியா சார்பில் ராஜேந்திர ராஜன் தயாரித்துள்ள இந்த படத்தில் 'போலீஸ்காரன கட்டிக்கிட்டா' என்ற பாடல் இடம் பெற்றுள்ளது.

இந்த படத்தின் சில பாடல்களை படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றிய ஜெகன் கவிராஜ் என்பவர் எழுதியிருக்கிறார். அதில் 'போலீஸ்காரன கட்டிக்கிட்டா...' என்ற பாடலும் இவர் தான் எழுதியதாக கூறப்பட்டது. இவர் ஏற்கெனவே வேறு சில படங்களிலும் பாடல் எழுதி உள்ளார்.
இந்த நிலையில் படத்தின் அறிமுக நிகழ்ச்சி கடந்த மாதம் நடந்தது. இந்த நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே "ஜெகன் கவிராஜ் எழுதிய பாடலுக்கு உங்கள் பெயரை எப்படி போட்டுக் கொள்ளலாம்" என்று சிலர் அப்போது குரல் எழுப்பினர். இதை தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் "நிகழ்ச்சி முதலில் நடக்கட்டும் பின்னர் நீங்கள் இயக்குனரிடம் இதுபற்றி கேட்கலாம்" என்று கூறி அப்போது சமாதானம் செய்தார். இதை தொடர்ந்து விழா முடியும் தருவாயில் மீண்டும் இந்த விஷயம் தொடர்பாக கேள்வி எழுப்பியதும், இயக்குனர் ஷக்தி சிதம்பரம் நிகழ்ச்சியை விட்டு வேகமாக வெளியேறியதால் அப்போது பரபரப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து பேசிய ஜெகன் கவிராஜ் "ஒரு மலையாள படத்தில் இடம்பெற்ற பாடலை இன்ஸ்பிரேஷனாக கொண்டு போலீஸ்காரன கட்டிகிட்டா பாடலை எழுதினேன் என்று கூறினார். இதனிடையே பாடலில் டபுள் மீனிங் இல்லை என்றும் பாடலே டபுள் மீனிங்காகவே உள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்தது. இதுபற்றி இயக்குநர் சக்தி சிதம்பரம் அப்போது கூறும் போது "பாடல் செம ஹிட். சமூக வலைத்தளங்கள்ல வர்ற விமர்சனங்களைப் பற்றி நான் கவலையே படவில்லை. மக்கள் இந்த பாடலை விரும்பி கேட்கிறாங்க. பாடல் குறித்து உங்களின் பார்வையில்தான் அது தவறாகத் தெரிகிறது. அந்த மாதிரியான எண்ணத்தில் பாடல் எழுதவில்லை. தவறாக பார்ப்பவர்களின் கண்ணை மாற்றச் சொல்லுங்கள்" என்று அப்போது கூறினார்,.
அடேய் சக்தி சிதம்பரம் உருவி போட்ட song க்கு சண்டை வேற போட்டீங்க.....
— Crow Killer Kabilan (@HunterKabilan) December 16, 2024
நியாயமா பார்த்தா copyrightக்கு காசு கொடுக்கணும்.... pic.twitter.com/GLjy92cUum
இந்நிலையில் போலீஸ்காரன கட்டிக்கிட்டா லத்திய வச்சு அடிப்பான்... டாக்டரை நான் கட்டிக்கிட்டா ஊசியால் குத்துவான்.. என்ற பாடல் அப்படியே கடந்த 1983ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவப்பு சூரியன் பாடலை போன்று இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த பாடலையும் இந்த பாடலையும் ஒன்று சேர்த்து மீம்ஸ் வடிவில் வெளியிட்டிருக்கிறார்கள். பழைய பாடலில், கண்ட கண்ட மாப்பிள்ளையை கட்டிக்க மாட்டேன்.. வண்டி ஓட்டும் மாப்பிள்ளையை கட்டிக்க மாட்டேன்.. அவர் மாடு விரட்டும் குச்சியை காட்டி என்னை விரட்டுவான்.. வாழைப்பழம் விற்பனை கட்டிக்க மாட்டேன். அவன் பசிக்கும் போது என்னை திங்க சொல்லுவான்" என்று அந்த பாடல் போய்கொண்டே இருக்கிறது. இந்த பாடலில் இருந்தே போலீஸ்காரன கட்டிக்கிட்டா பாடல் வந்திருப்பதாக நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications