பனியன் காயுறதுக்கு மூணு நாள், சட்டை காய 5 நாள், ஜீன்ஸ் காய ஒரு யுகமே தேவைப்படுது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த ரண களத்திலும் ஒரு கிளுகிளுப்பு என்று சொல்லும் வகையில், மழை, வெள்ளத்திற்கு நடுவேயும் மீம்களை தெறிக்கவிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.

மழையால் மக்கள் அவதிப்பட்டாலும், அதை சிரிப்பை கொண்டு மறக்கடிக்க வேண்டும் என்பதுதான் மீம் உருவாக்குநர்கள் நோக்கம்.

மீம்ஸ்கள்தான் சில நேரங்களில் படும் கஷ்டங்களை மறந்து பாதிக்கப்பட்டவர்களையே கூட சிரிக்க வைப்பவை.அப்படித்தான் சிரிக்க வைத்து, நிலைமையையும் எடுத்துச் சொல்லும் வகையிலான சில மீம்கள் இங்கு உள்ளன பாருங்கள்

தாம்பரம் டைட்டானிக்

டைட்டானிக் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள, கப்பலுக்குள் தண்ணீர் வரும் காட்சியையும், அதில் மனிதர்கள் அடித்துக்கொண்டு செல்வதையும், தாம்பரம் சுரங்கப் பாதையில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தையும் ஒப்பிட்டு சொல்கிறது இந்த மீம். இதை பார்த்து சிரிக்கவா, வருத்தப்படுவதா என புரியவில்லை.

இன்னுமா சார்ஜ் நிக்குது?

இன்னுமா சார்ஜ் நிக்குது?

அதேபோல இன்னொரு மீம் இப்படி சொல்கிறது. 8 மணி நேரமா ஆச்சே, கரண்ட் எப்போ வரும்னு கேட்டிருந்தால், உன் போன்ல இன்னுமா சார்ஜ் நிக்குது என்ன மாடல் என்று கேட்கிறார்கள், என்று கூறுகிறது. நியாயம்தானே?

ஜீன்ஸ் காயப்போட ஒரு யுகமே தேவைப்படும்

ஜீன்ஸ் காயப்போட ஒரு யுகமே தேவைப்படும்

மெர்சல் படத்தில் இடம் பெற்ற ஒரு தலைவன் உருவாக ஒரு யுகமே தேவைப்படுகிறது.. என்ற டயலாக்கும் மீம்சுக்கு தப்பவில்லை. ஒரு பனியன் காயுறதுக்கு மூணு நாள், ஒரு சட்டை காயுறதுக்கு ஒரு வாரம், ஒரு ஜீன்ஸ் பேண்ட் காயுறதுக்கு ஒரு யுகமே தேவைப்படும். இப்படி ஒரு மீம் ரொம்பவே சீரியசாக இதைச் சொல்கிறது.

சந்திரமுகி காமெடி

சந்திரமுகி படத்தை நினைவூட்டுகிறது இந்தகாட்சி. மழை கிளம்பிடுச்சிப்பா கிளம்பிடுச்சி என்கிறார்கள் மக்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Some of the memes which deals Chennai rains creating smile among the people.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற