ஒரே மீம்.. மொத்தமா சோலி முடிஞ்சதே.. சிஎஸ்கே பற்றி டிரெண்டாகும் அந்த போட்டோ.. இதை பாருங்க!
சென்னை: ஐபிஎல் போட்டிகளில் 5 முறை கோப்பை வென்ற சிஎஸ்கே அணியை வைத்து ஒரு மீம் டிரெண்டாகி வருகிறது. இதில் வேறு ஒரு அணியையும் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
ஆரவாரம்.. கண்ணீர்.. வேண்டுதல்.. போராட்டம்.. களைப்பு.. உற்சாகம் என்று பெரும் உணர்ச்சி பெருக்கோடு நடந்து முடிந்து இருக்கிறது 2023 ஐபிஎல் தொடர். இந்த சீசன் தோல்வியோடு தொடங்கிய சிஎஸ்கே அணி யாரிடம் தோல்வி அடைந்ததோ அதே குஜராத் அணியை இரண்டு முறை அடுத்தடுத்து வீழ்த்தி பைனலில் வென்று கோப்பையை பெற்றுள்ளது.
முக்கியமாக 5 வது முறையாக கோப்பையை சிஎஸ்கே வென்றுள்ளது. இதுவரை மும்பை மட்டுமே 5 கோப்பைகள் வென்ற அணி என்ற சாதனையை கொண்டு இருந்தது. அதை தற்போது சிஎஸ்கே சமன் செய்துள்ளது.

சிஎஸ்கே மேட்ச்: நேற்று சிஎஸ்கே டாஸ் வெல்ல குஜராத் முதலில் பேட்டிங் செய்தது. 39 பந்துகள் பிடித்த சாகா 54 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் கில் 20 பந்தில் 39 ரன்கள் எடுத்தார், ஆனால் அதிரடி குறையாமல் ஆடிய தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் 96 ரன்களை 47 பந்துகளில் எடுத்தார். 8 சிக்ஸ், 6 பவுண்டரி என்று சிஎஸ்கே அணியை இவர் புரட்டி எடுத்தார்.
சிஎஸ்கே அணியை இவரின் பேட்டிங்தான் கதறவிட்டது. இவரின் ஆட்டம்தான் சிஎஸ்கே அணிக்கு எதிராக மாறியது. கடைசியில் ஹர்திக் பாண்டியாவும் 12 பந்தில் 21 ரன்கள் எடுக்க குஜராத் அணி 20 ஓவரில் 214-4 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இவ்வளவு பெரிய ஸ்கோரை எடுத்து சிஎஸ்கே அணி வெற்றிபெறுமா என்ற சந்தேகம் பலருக்கும் நிலவியது.

மழை: இதையடுத்து சிஎஸ்கே மேட்சில் மழை குறுக்கிட்டது. இதனால் 4 ரன்கள் எடுத்த நிலையில் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்ய காத்திருந்தது. மழை மற்றும் ஈரப்பதம் காரணமாக ஆட்டமும் சுருக்கப்பட்டது. 15 ஓவரில் 170 ரன்கள் எடுக்க வேண்டும் என்று டிஎல்எஸ் முறையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்து திரில் வெற்றிபெற்றது.
சிஎஸ்கே அணியில் கான்வே 47, ரஹானே 27 எடுக்க கடைசியில் டேஜா - துபே இருவரின் ஆட்டமும் நேற்று சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இருப்பினும், ஜடேஜா ( 6 பந்தில் 15 ) மற்றும் சிவம் துபே ( 21 பந்தில் 32* ) எடுத்தனர்.இருவரின் ஆட்டம் சிஎஸ்கேவின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

கிண்டல்: இந்த வெற்றியை வைத்து இணையம் முழுக்க பல மீம்கள் போடப்பட்டு வருகின்றன. அதில் ஐபிஎல் போட்டிகளில் 5 முறை கோப்பை வென்ற சிஎஸ்கே அணியை வைத்து ஒரு மீம் டிரெண்டாகி வருகிறது. இதில் ஆர்சிபி அணியையும் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். அதில் சிஎஸ்கே அணி 6வது கப்பும் எங்களுக்குதான்.. என்று சொல்வது போலவும்.. அதற்கு மும்பை அணி இல்ல எங்களுக்குதான்.. என்று சொல்வது போலவும்.. கடைசி பெங்களூர் அணி டேய்.. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லியாடா.. என்று பதில் அளிப்பதாக மீம் போட்டுள்ளார்.
இணையம் முழுக்க இந்த ஒற்றை மீம் தற்போது டிரெண்டாகி வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications