பலகாரம் செய்யத் தெரியாதுனா.. சொல்ல வேண்டியதுதானே.. இப்படியா என் பல்லை உடைக்க திட்டம் போடுறது!
தீபாவளிக்கு வீட்டில் செய்யப்படும் பலகாரங்கள் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தீபாவளிக்கு எவ்வளவுதான் கடையில் பலகாரங்கள் வாங்கினாலும், வீட்டில் செய்யப்படும் முறுக்கு, அதிரசம், லட்டு போன்றவை எப்போதுமே ஸ்பெஷல்தான்.

ஆனால் முன்பு மாதிரி வீட்டில் இருப்பவர்களுக்கு பலகாரங்களை பக்குவமாகச் செய்யத் தெரிவதில்லை. பல நூறு யூடியூப் சேனல்களைப் பார்த்து, அவர்கள் தரும் டிப்ஸ்களையெல்லாம் வைத்து கைக்கு வந்ததை எல்லாம் பலகாரம் என்று செய்து விடுகிறார்கள். சாப்பிடுகிறவர்கள் தான் பாவம். முறுக்கை சுத்தியல் வைத்து உடைக்க வேண்டி இருக்கிறது.

தீபாவளி வருகிறது பட்டாசு, போனஸ், விடுமுறை, மழை எனக் கலாய்த்தால் மட்டும் போதுமா.. அதனால் வீட்டில் அதிலும் குறிப்பாக மனைவிகள் செய்யும் பலகாரங்களை வைத்து மீம்ஸ்களாக பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...


















Click it and Unblock the Notifications