நேசியுங்கள்.. நேசிக்கப்படுங்கள்!

Subscribe to Oneindia Tamil

இந்த உலகில் 2 மகிழ்ச்சி மட்டும்தான் நிரந்தரம்.. ஒன்று நாம் அடுத்தவரை நேசிக்க வேண்டும்.. அதனால் கிடைக்கும் மகிழ்ச்சி.. அதேபோல மற்றவர்களால் நாம் நேசிக்கப்படுவது.. இது மட்டற்ற மகிழ்ச்சி தரும் மிகப் பெரிய சந்தோஷம்.

அன்புடையார் எல்லாம் உடையார் என்பார்கள் அதுபோல பிறரால் நேசிக்கப்படும் நபராக நீங்கள் இருந்தால் நிச்சயம் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான். அன்பால் அகிலத்தையே ஆள முடியும். உங்களால் முடிந்தவரை உங்களைச் சுற்றியிருப்போரிடம் அன்பாக இருங்கள். உங்கள் துணையை நேசியுங்கள். மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்.

Love others to be loved

குழந்தைகளோடு விளையாடுங்கள் உங்கள் பெற்றோர்களுக்குப பிடித்ததை வாங்கிக் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள். உங்களை மற்றவர் நேசிக்க வேண்டுமென்றால் இன்சொல்லும் இன்முகமும் அவசியம். எப்பொழுதும் முகத்தில் புன்னகை தவழட்டும். நீங்கள் உங்கள் பெற்றோர்கள் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர் மீது காட்டும் அக்கறையால் நீங்கள் அவர்களால் அதிகம் நேசிக்கப்படுவீர்கள்.

ஏழை எளியோர்க்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள். உங்கள் துணைக்குப் பிடித்ததை வாங்கிப் பரிசளித்து மகிழுங்கள். வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆசை இருக்கும். அது சிறியதோ பெரியதோ அதை நீங்கள் கண்டுபிடித்து நிறைவேற்றினால் நீங்கள் மற்றவர்களால் அதிகம் நேசிக்கப்படுவீர்கள்.

வானத்தில் மேகங்களை ரசியுங்கள் பூக்களின் வாசத்தை நுகருங்கள். பிள்ளைகளையும் பெற்றோரையும் நண்பர்களையும் நேசியுங்கள் உங்கள் கூட இருப்பவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துங்கள். புன்னகையும் இன்சொல்லும் கொண்ட நீங்கள் பிறரால் நேசிக்கப்படுவீர்கள்.

அன்பு ஒன்றே பிரதானம். நீங்கள் பிறரிடம் காட்டும் அன்பைப் பொறுத்து தான் பிறரும் உங்களை நேசிப்பார்கள். அன்பு சூழ் உலகில் உங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்ளுங்கள். அனைவரையும் நேசியுங்கள் நீங்களும் பிறரால் நேசிக்கப்படுவீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+