இந்த நாள் இனிய நாள்: மனம் சந்தோஷமாக மாற இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க! வாழ்க்கை வாழ்வதற்கே!
எத்தனை சோகங்கள் வந்தாலும் நீ துவண்டு போகாதே நண்பா, எல்லாவற்றையும் உன் அனுபவமாக மாற்று
சென்னை: கடந்து போன கவலைகளையும் காயங்களையும் நினைத்துக் கொண்டிருக்காமல் இந்த நாள் இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் மாற இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க நண்பர்களே.
நடந்ததை நினைத்து வருந்தி கொண்டே இருந்தால் இன்று நடக்கும் நல்ல நினைவுகளை கூட மனம் அனுபவிக்க மறந்து விடுகிறது.
கடந்து போனது கடந்ததாகவே இருந்து விட்டுப் போகட்டும் இப்போது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை மட்டும் நல்லதாக மாற்றுவதற்கு பாசிட்டிவ் சிந்தனைகள் மட்டுமே நமக்கு துணையாக வருகிறது.

மனசோர்வு வேண்டாம் நண்பா
நண்பர்களே, இந்த வாழ்க்கை என்பது வாழ்வதற்கு தான் என்று பலரும் கூறுவார்கள் ஆனால் நமக்கு என்று சில பிரச்சனைகளும் கஷ்டங்களும் வந்த போது நாம் அதற்குப் பிறகு அதிலிருந்து மீளாமல் அதையே யோசித்துக் கொண்டு இருக்கிறோம். நாம் யோசிக்கவில்லை என்றாலும் பல நிகழ்வுகள் அதைப்பற்றி சிந்திக்க வைத்து விடுகிறது. அதிலிருந்து மீள்வதற்கு ஒரே வழி நம்முடைய மனதை சுறுசுறுப்பாக மாற்றுவது தான். மனதுக்கு சோர்வு வரும் போது தான் பழைய நிகழ்வுகளை அசைப்போட துவங்கும். மனதில் சோர்வு வந்தால் அது உடலையும் சோர்வாக்கி நம்மை நோயாளியாக மாற்றி விடும். அதனால் அந்த மனதையும் உடலையும் எப்போதும் சுறுசுறுப்பாக குழந்தைத்தனமாக வைத்துக் கொண்டாலே தேவை இல்லாத சிந்தனைகளும் கடந்து போன நிகழ்வுகளும் நம்மை விட்டு மறைந்து போய்விடும்.

சிந்தனையை மாற்ற வேண்டும்
வாழ்க்கையில் அனைத்தையும் தாங்கிக் கொள் என்று சொல்வது எல்லாருக்கும் எளிமையானது தான். ஆனால் அனைத்தையும் தாங்கிக் கொண்டு வாழ்பவர்களுக்கு தான் தெரியும், அதில் உள்ள வலியும் வேதனையும். அதனால் யாருக்கும் நாம் பாடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். ஆனால் அந்த வலியையும் வேதனையையும் தாங்கிக் கொண்டே இருக்காமல் எப்படி அதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று நாம் தான் கண்டுபிடிக்க வேண்டும். நமக்கு ஒரு சோகமோ, ஏமாற்றமோ, எதிர்பாராத இழப்போ ஏற்பட்டு விட்டால் மனது சந்தோஷமாக இருக்காது. துக்கமாகத்தான் இருக்கும் அதில் இருந்து நாம வெளிய வரணும் என்றால் அந்த நினைப்பு நம்மை விட்டு மறக்க வேண்டும் என்று நினைக்கவே கூடாது. நான் நம்முடைய மனதை வேறு திசைக்கு திருப்ப வேண்டும்.

பிடித்ததை ரசிக்கலாம்
உதாரணமாக நம்முடைய வேலையை அதிகரிக்க வேண்டும். அதுவும் பிடித்த வேலையை ரசித்து செய்ய வேண்டும். சிலருக்கு சமையல் செய்வது பிடிக்கும், சிலருக்கு படம் வரைவது பிடிக்கும், சிலருக்கு பாட்டு கேட்பது பிடிக்கும், சிலருக்கு இயற்கையை ரசிப்பது பிடிக்கும். நாம் சோகமாக இருக்கும்போது நமக்கு எது பிடிக்கிறதோ அதை ரசித்து செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு ஏதோ இதை மறப்பதற்காக செய்கிறேன் என்று நாம் செய்தாலோ அல்லது ஈடுபாடு இல்லாமல் இன்னொரு வேலையை செய்தாலோ நம்முடைய மனமும் எதை மறக்க நினைக்கிறோமோ அதில் தான் அடிக்கடி சென்றுவிடும்.

சோகத்தையே புலம்ப வேண்டாம்
எப்போதுமே எல்லோராலும் சந்தோஷமாக இருக்க முடியாது. எல்லோருக்கும் சோகம் துக்கம் சந்தோஷம் என எல்லாமே மாறி மாறி வந்து கொண்டு தான் இருக்கும் ஆனால் நமக்கு தான் சோகம் இருக்கிறது,எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு நம்ம சோகத்தை அடிக்கடி எல்லார்கிட்டயும் பகிர்ந்து கொண்டே இருந்தா அது மேலும் மேலும் நம்மை சோகத்தில் தான் ஆழ்த்தும். நமக்கு பிடித்த நபராக இருந்தாலும் நம்முடைய சோகத்தை அடிக்கடி அவங்ககிட்ட ஷேர் செய்யும் போது அவங்கள அறியாமலே நம்ம மேல அவங்களுக்கு ஒரு நெகட்டிவ் சிந்தனை உருவாகிவிடும். ஐயோ இவங்க ஒரு புலம்பல் கேஸ் என்று நம்மளை அவங்க ஒதுக்கி விட கூடும். அதுமட்டுமில்லாமல் நம்ம எதை நினைக்கணும்னு நினைக்கிறோமோ அதையே பேசிகிட்டு இருக்கும்போது அந்த சிந்தனை நம்மளை அறியாமல் மேலும் மேலும் நம்ம மூளையை ஆக்கிரமிக்க தொடங்கிடும்.

அம்புட்டு அழகு நீங்க
சோகமாக இருக்கும்போது கண்ணாடி முன்பு நின்று உங்க முகத்தை பாருங்க, அதில் தெரியும் கண்களை பாருங்க, அது எவ்வளவு அழகாக இருக்கிறது என்று ஒரு நிமிடம் ரசிச்சி பாருங்க. அப்படியே அந்த உதட்டை பாருங்க, அதில் லேசாக புண் முறுவல் செய்து பாருங்க, இப்போ உங்க முகம் எவ்வளவு அழகாக இருக்குன்னு பாருங்க. இந்த உலகத்துல உங்களை விட அழகா வேற யாராலும் இருக்கவே முடியாது. இதை மட்டும் எப்பவும் மனசுல நினைச்சுட்டு, எப்ப எல்லாம் சோகமா இருக்குமோ அப்ப உங்க அழகான முகத்தை மட்டும் பாருங்க, உங்களுக்கு அதுவே பெரிய பெரிய பாசிட்டிவ். நமக்கு ஆறுதல் வேறு யாருமே கிடையாது. நம்மளோட சிரிப்பு தான். இந்த சிரித்த முகத்தை வச்சுக்கிட்டே இன்றைய பணியை தொடங்குங்க எல்லாமே மகிழ்ச்சியாக மாறிவிடும்.
-
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு -
"முதல்ல பணத்தை எடுத்து வை.." ஹார்முஸை கடக்க சுங்க கட்டணம்.. மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய ஈரான் -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
சவால் விட்ட செங்கோட்டையன் அதிர்ச்சி.. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரே இல்லாததால் கடும் அப்செட்! -
சரியான நேரத்தில் எச்சரித்த ஆனந்த் சீனிவாசன்... சட்டென எகிறிய தங்கம் விலை.. இனி என்ன நடக்கும்? -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
உன்னை கட்சியில் வைத்திருந்தால்.. அதிமுகவையே விற்றுருப்பாய்.. ஓபிஎஸ்ஸை தரக்குறைவாக பேசிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications