For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

கி. ராஜநிாராயணனின்

நிாட்டுப்பொறம்...

இந்த நிாட்டுப்புற உலகத்துக்கு உள்ளே நிேயர்களை அழைத்துக் கொண்டு போவதற்கு ன்னால் அவர்களுக்குச் சில தயாப்புகளைச் செய்யவேண்டும். டாக்டர்களும், செவிலியர்களும் அறுவை சிகிச்சைக் கூடத்துக்குப் போவதற்கு ன்னால் தலை, க்கு, வாய் மற்றும் கைகளை நிாேய்த்தொற்றுகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள துணிக்கவசம், ரப்பர் உறை இப்படி அணிந்துகொண்டு போவதைப் போல, ஒரு விழிப்புணர்வோடு போனால்தான் பல சிக்கல்களில் இருந்து தப்ப டியும்.

நிாட்டுப்புறக் கதைகள் தானே என்று மெத்தனமாக நனைச்சுவிடக்கூடாது. அந்தக் கதைகள் உண்டான காலநிேரம் வேறு இப்போது நிாம் வாழும் காலநிேரம் வேறு. அப்போது இருந்த சிந்தனை, சாதிய நலைப்பாடுகள், சதாய அமைப்பு றைமைகள் போன்றவற்றை மனசில் வாங்கிக் கொள்ளவேணும். அதோடு கதையை கதையாக மட்டுமே பார்க்கத் தெயவேணும். அபபோதுதான் ரசிப்பு ஏற்படும்.

பல கதைகளில் பாத்திரங்களின் பெயர்களோடு சாதியும் சேர்ந்தே வரும். தொழிலோடும் சாதியோடும் சேர்த்துச் சொல்லப்படும் கதைப் பார்த்திரங்களை பாத்திரங்களாக மட்டுமே காணவேணும். கதைகளை வாங்கிக் கொள்கிற றைமை இதுதான்.

இப்போது சில கதைகளைப் பார்க்கலாம்...

இந்தக் கதையைச் சொன்னவருடைய ஊர் - பூவரசம்பட்டி (ராமநிாதபுரம் மாவட்டம்)

பெயர் - ருகு

வயது - உத்தேசமாக 50

தொழில் - கிளி சோசியம்

கதையைக் கேட்டு எனக்குச் சொன்னவர் திருமதி பாரததேவி, சொக்கலிங்கபுரம்.

இந்தக் கதைக்கு நிான் இட்ட தலைப்பு -

அதிகப்பிடிச்ச ஞ்சூரு கழனிப்பானையில் விழுந்து செத்ததாம்

ஒரு ஊர்ல ஒரு வைத்தியர் இருந்தார். அவருக்கு அவுக தாத்தா பூட்டன் ஓட்டன்னு பரம்பரையாவே வைத்தியத் தொழில் செஞ்சிட்டு வந்ததுனால இவரும் தொழில்ல நில்ல ன்னேறி இருந்தாரு.

எப்படியாப்பட்ட நிாேயானாலுஞ்ச இவருபோயித் தொட்டாப் போதும் தீராத நிாேயெல்லாம் தீந்திரும்னு பேரு வாங்கிட்டாரு. பெயவங்க சம்பாதிச்ச சொத்து ஏழு தலறைக்கு உக்காந்து திங்கலாம். அம்புட்டு சவுகயம். அதனால, இந்த வைத்தியரு "பால்ல கைகழுவ பன்னீல குளிக்கன்னு அப்பிடி வசதியா இருந்தாரு.

இப்படிக் கைராசியோட வைத்தியத்திலேயும் கெட்டிக்காரரா இருந்த வைத்தியரு ஒரு விசயத்தில மட்டும் ரொம்...ப மோசமானவரா இருந்தாரு. பொம்பள விசயத்தில மகா மோசம்! தீராத நிாேய்க்காட்டையும் தீத்துவச்சாரு; ஆனா அதுக்குப் பதிலா பணங்காசு வாங்காம பொம்பளதாம் வேணும்னு கேப்பாரு. அதனால ஊர்க்காரங்களும் அக்கம்பக்கத்துல இருந்தவங்களும் இவர் பேர்ல கோவம்னா கோவம், எச்சல்னா எச்சல். என்ன செய்யிறதுனு தெயாம தவுதாயப்பட்டுக்கிட்டு இருந்தாங்க.

இப்படி இருக்கிறப்ப, அந்த நிாட்டு ராசாவுக்கு துகில ராசபிளவை வந்து கஸ்டம்னா கஸ்டம். அப்படி ஒரு கஸ்டப்பட்டுக்கிட்டு இருந்தாரு. பாக்காத வைத்தியமில்ல, திங்காத மருந்துமில்ல. உலகத்தில இருக்கற அம்புட்டு வைத்தியமார்களையெல்லாம் கூட்டியாந்து பாத்தாங்க. தங்கமா அள்ளிக் கொட்டி வைத்தியம் பாத்தாங்க. நிாளுக்குநிா பிளவை உசுரு வாங்கிச்சே தவிர குணமாகிறதாத் தெயல. ராசா மனசவிட்டுட்டாரு.

இனி ராசா பிழைக்கறது கடுமெதாம்னு அரமணை வைத்தியரு தக்கொண்டு கையை விச்சிட்டாங்க. அதெக் கேட்ட ராணி, ராசா பக்கத்துல இருந்து ராவும்பகலும் அழுவுதா, அழுவுதா, அப்படி அழுவுதா. அதெப் பாத்தவுக எல்லாம் பதவிச்சுப் போனாங்க.

அப்ப, ராணிக்கு உறுத்தா இருந்த ஒரு மந்தி ராணியத் தனியாக்கூப்டு இந்தக் கைராசிக்கார வைத்தியரப் பத்தியும் அவரோட திறமயப் பத்தியும் சொன்னதோட, அவரு கூலி கேக்கற லட்சணத்தப் பத்தியும் சொன்னாரு. அதெக் கேட்ட ராணி, நிானு எப்படிப் போனாலும் ச, என்னோட ராசா பிழைச்சாப் போதும் அவரோட உசுருதாம் எனக்கும் இந்த நிாட்டுக்கும் க்கியம்னு சொல்லிட்டா.

அப்ப சன்னு மந்தி, அந்த "பொம்பளை அவக்காச்சிபிடிச்ச வைத்தியரத் தேடிப் போனாரு. பஞ்சனை மெத்தையில நிட்ணக்காலு போட்டு சாஞ்சிக்கிட்டு இருந்தாரு வைத்தியரு. ரெண்டு வேலைக்காரக விசிறிக்கிட்டு நக்க, ஒரு வேலைக்காரன் கால அக்கிக்கிட்டு இருந்தாம். அதப் பார்த்த மந்தி, இம்புட்டு வசதியோட இருக்கவம் பணத்துக்கு எப்பிடி வைத்தியம் பாப்பாம்னு மனசுக்குள்ள நனைச்சிக்கிட்டு, மகாராசாவுக்கு வைத்தியம் பாக்க வரனும்னு கூப்புட்டாரு. வைத்தியரும் என்னோட கூலியப்பத்தி ராசாவுக்குத் தெயுமான்னு கேக்க, அடப்பாவி, நிாடாளுத ராசாகிட்டவும் பொம்பளக்கூலி வாங்கப்போறியான்னு மனசுக்குள்ள நனைச்சுக்கிட்டு, நீ நிெனைச்சது உனக்குக் கிடைக்கும்னாரு.

வைத்தியரு அரமணைக்கு வந்து ராசாதுகில இருந்த பாசபிளவையப் பாத்து, பூ இதுதானா, இத குணமாக்க எனக்கு இருபதுநிாளு போதும். இன்னைக்கே ஆரம்பிக்கட்டுமா நிாளைக்கு ஆரம்பிக்கலாமான்னு கேக்க, ராசாவும் இப்பவே ஆரம்பி, வலி பொறுக்கமாட்டாம தினோம் செத்துச் செத்து பிழைச்சிக்கிட்டிருக்கேம்பா. என்னோட வேதனையும், வலியும் மட்டும் நீ தீத்துவச்சிட்டா இந்த அரமணையையே ஒனக்கு எழுதி வச்சிருவேம்ன்னார், ஓம் அரமணை எவனுக்கு வேணும்னு மனசில நனைச்சிக்கிட்டு, மந்தி காதுல, என்னோட கூலி விவரத்தைப் பத்தி ராசாகிட்ட சொல்லலையான்னு வைத்தியரு கேட்டாரு.

இவுக ரகிசயம் பேசுறதப் பாத்த ராசா, மந்திகிட்ட என்ன விவரம்னு கேக்கவும், அவரு வைத்தியரோட பொம்பளை வெவகாரத்தச் சொல்ல ராசாவுக்குக் கோவம் அண்டகடாரம் ட்டிப்போச்சி.

என் நிாட்லேயே இப்படி ஒரு அநயாயம் அக்ரமம் நிடக்கா? இம்புட்டு நிாளும் தெயாமப் போச்சேன்னு சொன்ன ராசா, இந்தக் கிறுக்கிப் பிள்ளெய பிடிச்சி இப்பவே கொண்டுபோயி கழுவுல ஏத்துங்கடான்னு உத்தரவு போட்டாரு.

இதக் கேட்டதும் ராணி பதறிப்போனா. மந்தியவும் வைத்தியரவும் அங்கிட்டு போகச் சொல்லிட்டு, ராசாகிட்ட இப்ப நீங்க இந்த வைத்தியன கழுமரத்துல ஏத்துறதுனால ஒரு புண்ணியம் இல்ல. வம்பா உங்க உசுரும் போயி அவம் உசுரும்தாம் போகப் போவுது. இப்ப நீங்க வைத்தியத்துக்கு தல்ல சம்மதிங்க. அந்த வைத்தியன நிாங் கவனிக்சிக்கிடுறெம்னா.

ராணியோட திறமைபேர்ல ராசாவுக்கு நிம்பிக்கை இருந்தது. வலிதாங்க டியாத ராசா, ராணி சொல்லுக்குக் கட்டுப்பட்டு சம்மதிச்சாரு. வைத்தியனும் அவம் மருத்துவத்த ஆரம்பிச்சாம். எண்ணி 15 நிாளைக்குள்ளயே அந்த ஆறாத ராசாபிளவ ஆறிப்போச்சி! நிாடே அதிசயபபட்டுப் போச்சி. ராசாவுக்கும் ராணிக்கும் உண்டான சந்தோஷத்த சொல்லனுமா.

அப்பவே மந்திகிட்ட வைத்தியரு, நிாங்கேட்டது என்ன ஆச்சின்னு நிெருக்குறாரு. வைத்தியர ராணிகிட்ட கூட்டிட்டு வந்து விட்டாரு மந்தி. ராணி சொன்னா, வைத்தியரே மந்தி எல்லா வெவரத்தையும் ஏங்கிட்ட ந்தியே சொல்லி அதுக்கு நிாஞ் சம்மதப்பட்டுத்தாம் ஒம்ம அரமணைக்கு வரவழச்சது. ஒம்ம ஆசை நறைவேற ஒரு நிாப்பது நிா நீரு காத்திருக்கனும். ராசாவுக்கு இந்த நிாேயி குணமானா நிாப்பதுநிா விரதமிருந்து அம்மனுக்கு ஒரு நிேமகம் செலுத்துறதா நிா வேண்டிக்கிட்டிருக்கேம். தல்ல அத டிச்சிட்டு பிறகு உம்மகிட்ட நிா வருவேம். ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுக்கக்கூடாதா. கிணத்துத் தண்ணிய வெள்ளம் கொண்டு போயிருமான்னு சொன்னா.

ராணி சொன்னதக் கேட்டதும், ஒரு வைத்தியக் கூலிக்காக நிா இத்தினி நிாளு காத்திருக்கவேணுமான்னு வைத்தியர் கேட்டதும், ராணி நீரு இந்த நிாப்பதுநிாளும் என்னோட அந்தப்புறத் தோட்டத்துக்கு வந்துரும் நிாம பேசிக்கிட்டிருப்போம்னா. ஒடனே, வைத்தியருக்கு சந்தோசம் பொறுக்கல. அப்பநிானு நிாளையிலிருந்து மேக்க அடி திரும்ப வந்திருதேன்னாரு. நீரு வாரது ச. நிானு விரதம் இக்கறதுனால வந்து கண்டதும் கடியதும் பேசக்கூடாதுன்னு சொன்னா.

வைத்தியரு குக்கிப்போயி அப்ப நிா அந்த நிேரத்துல வந்து வேற எதப்பத்தித்தாம் பேசிக்கிட்டிருக்கன்னு கேக்க, வைத்தியத்தப் பத்திப் பேசுவமெ. இந்த நிாேய்க்கு இன்ன இன்ன மருந்து, பச்சிலன்னு சொல்லும் நிா கேட்டுக்கிட்டு இருக்கேன்னா. அதுவுஞ் சதாம்னு வைத்தியருக்குத் தோணிச்சி. சன்னார். நிாடாளுத ராணிகூட சமமா உக்காந்து தன்னோட வைத்தியம் மருந்து வகைப் பெருமைகளையெல்லாம் அவுத்துவிடலாம்ன்னு அவருக்குப் பெருமிதம்.

மறுநிாளே ராணி தன்னோட வேலையாளைக் கூப்புட்டு, நிானும் வைத்தியரும் நிம்ம அந்தப்புற தோட்டத்துல உக்காந்து மருந்து வகைகளைப் பத்திப் பேசிக்கிட்டிருப்போம். நீ மறைவில இருந்து கேட்டு அதுகள விவரமா எழுதனும்னு சொல்லி ஏற்பாடு பண்ணிட்டா.

அந்த நிாளயிலிருந்து, வைத்தியரு சொன்ன மருந்து வகைகளை அந்த வேலையாள் கவனமாக் கேட்டு எழுதிவச்சி ராணியிட்டே தந்துக்கிட்டே இருந்தாம். இப்படியே நிாப்பதுநிாளும் போயிருச்சி. எல்லா நிாேய்களுக்கும் இன்ன இன்ன மருந்து, அதெ இப்படி இப்படிச் செய்யணும், இன்ன நிாேய்க்கி இன்ன பச்சில, அதுகள இப்படிப் பறிக்கணும், இப்படிப் பக்குவமாக்கித் தரணுங்கிற சகல வைத்திய ரகசியங்களையும் அந்த ராணியோட கத்தெப் பாத்த பகுத்துல ஒண்ணு விடாமச் சொல்லிட்டாம்!

இங்க இப்படி மருந்துகளெப் பத்தி பேசிக்கிட்டே இருக்கிறப்போ ராணி இன்னொரு ஏற்பாட்டையும் செய்யச் சொல்லியிருந்தா. அது அந்த மந்திக்கும் தெயாது; ராசாவுக்கும் தெயாது.

அந்தக் காலத்து அரமணைகள்ள ரகசியச் சுரங்கப்பாதைக இருக்கும். ஒரு சுரங்கப்பாத கோயிலப்பாத்துப் போகும். இன்னொரு சுரங்கப்பாத ஊருக்கு வெளியே ஒரு காட்டுல கொண்டு போயிவிடும். எதிகள ஏமாத்த பொய் சுரங்கப்பாதகளும் இருக்கும். ஆபத்துக் காலங்கள்ள ராச குடும்பங்கள் தப்பி ஓடுதறதுக்கு அப்பிடியெல்லாம் ஏற்பாடுக இருந்தது.

நிாப்பதாவது நிாளுல ராணிகிட்ட வைத்தியரு கேட்டாரு. நிாளையோட விரதம், நிேமிக்கமெல்லாம் டியுதில்ல?

ஆமான்னா ராணி.

எப்ப எப்படி நிா ஒங்க படுக்கை அறைக்கு வர்றதுன்னு கேட்டாரு வைத்தியரு.

ராணி சொன்னை ஒரு திட்டி வாச அடையாளங் காமிச்சி, நிாளைக்கு ராத்தி நிடுச்சாமத்துல ஒரு அடையாள மணி அடிக்கும். இந்தத் திட்டி வாசலைத் திறந்தா அங்க உள்ளே ஒரு தீப்பந்தம் எஞ்சிக்கிட்டு இருக்கும். அதெ எடுத்துக்கிட்டு நிடந்தா கொஞ்ச தூரத்துல ஒரு சுரங்கப்பாத போறது தெயும். அது வழியா இறங்கி நிடந்தா படிக்கட்டுக வரும். அந்த எட்டுப் படிக்கட்டுகளக் கடந்தா அங்கயிருந்து ணு சுரங்கப்பாதக பியும். அதுல வலதுபக்கம் பியற சுரங்கப்பாத வழியா திகைக்காம நிடந்து வரணும். அப்படி நிேரா வர்ற சுரங்கப் பாதைதாம் என்னோட பள்ளியறைக்குக் கொண்டு வந்து விடுறபாத. ஞாபகமா மா சொன்னத எல்லாம் மனசுல வச்சிக்கிட்டு வந்திருங். நிா எதிர்பாத்துக்கிட்டே இருப்பேம்னா.

வைத்தியரும் அதேபடியா ராணி சொன்னபடி மறுநிா சுரங்கத்துக்குள்ளே நிடந்து வந்தாரு. பாதி வழி வந்திருப்பாரு. சுரங்கமே இடிஞ்சிவிழுந்து அவரெ டிக்கிட்டது. உயிரோட சமாதி ஆயிட்டாரு வைத்தியரு. இதும் ராணியோட ஏற்பாடுதாம். வைத்தியரு போனாலும் அவரு பாட்டாச் சொன்ன வைத்திய ஏடு இப்பவும் உலகத்துககு உதவுது அந்த ராணி புண்ணியத்துல என்று சொல்லி டித்தான் அந்தக் கிளி சோசியன்.

பச்சிலைகளைப் பத்தியும் மருந்துகளைப் பத்தியும் வைத்தியர் பாட்டாகச் சொன்ன அந்தப் பாடல்கள் எழுத்தில் தனியாகப் பதிவு செய்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கதைகள் புத்தகமாக ஆகும்போது அதில் வெளியிடப்படும்.

(இன்னும் வரும்)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X