தமிழகத்தில் இன்று
மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: மத்திய அரசுக்கு கருணாநிதிகடிதம்
சென்னை:
தமிழக மீனவர்கள் மீது இவங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்துவதைஉடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு, முதல்வர் கருணாநிதிகடிதம் எழுதியுள்ளார்.
எல்லை மீறி மீன் பிடிக்கும் மீனவர்களை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டுமே தவிர, சுட்டுக் கொல்லும் உரிமையை யார் கொடுத்தது? என்று முதல்வர்கருணாநிதி கண்டனம் தெரிவித்தார்.
சட்டசபையில் புதன்கிழமை அன்று ஜீரோ நேரத்தில் தமிழக மீனவர்கள் மீதானதுப்பாக்கிச் சூடு குறித்து, த.மா.க. உறுப்பினர்கள் ஞானசேகரன், அப்பாவு, தமிழ்மாநில தேசீய லீக் உறுப்பினர் நாசர் உள்ளிட்ட பலர் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம்கொண்டு வந்தனர். அதற்கு பதிலளித்து முதல்வர் கருனாநிதி பேசியதாவது:
கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைக்கும் போது, இந்திய மீனவர்கள் அங்கு மீன்பிடிக்கலாம் என்ற ஷரத்துடன் தான் ஒப்பந்தம் போடப்பட்டது. 1976ம் ஆண்டு தி.மு.க.ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு, அந்த ஷரத்து, ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டது.
அதை மீண்டும் இணைக்க வேண்டும் என்று அப்போது முதல் தி.மு.க. குரல் கொடுத்துவருகிறது. ஏற்கனவே கச்சத்தீவை ஒப்படைக்கும் ஒப்பந்தம் கொண்டு வந்த போதே,நாங்கள் கடுமையாக எதிர்த்தோம். அதன் காரணமாக அப்போதைய பிரதமர்இந்திராவை கூட பகைத்துக் கொண்டோம்.
இப்போது கச்சத்தீவு அருகில் மீன் பிடிக்கும் உரிமை இல்லை என்றாலும் கூட, இந்தியஎல்லையை மீறி கடலில் மீன் பிடிக்கும் நமது மீனவர்களை கைது செய்துஇந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.
அதை விட்டு, அவர்களை சுட்டுக் கொல்வது என்பது கடுமையாககண்டிக்கத்தக்கது.சுட்டுக் கொல்லும் அதிகாரத்தை அவர்களுக்கு யார் கொடுத்தது.
இது குறித்து இலங்கை தூதரகத்திடம் கண்டனத்தை தெரிவித்து உள்ளோம். இலங்கையில் உள்ள தூதரகமும், அந்நாட்டில் கண்டனத்தை தெரிவித்துள்ளது. தமிழக அரசின்சார்பில் மத்திய அரசுக்கு, நான் கடிதம் எழுதியுள்ளேன். இலங்கை துப்பாக்கிச்சூட்டைஉடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கூறியுள்ளேன்.
உயிரிழந்த மீனவர்களுக்கு அரசு சார்பில் ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி தரப்பட்டுள்ளது.இது போதாது மூன்று லட்சம், நான்கு லட்சம் தரப்பட வேண்டும் என்று உறுப்பினர்கள்வலியுறுத்தினர்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கென தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்காக 60 லட்சரூபாய் வழங்கப்படுகிறது. அதில் மூன்று லட்சத்தை நீங்கள் தந்தால், வாங்கி மீனவர்குடும்பத்திற்கு தரத் தயார் என்றார் முதல்வர்.
முன்னதாக இப்பிரச்சனை தொடர்பாக நடந்த விவாதத்தில் புதிய தமிழகம் தலைவர்டாக்டர் கிருஷணசாமி பேசும் போது., விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கியுள்ளஇலங்கை ராணுவத்தினரை மீட்க இந்தியாவின் உதவியை இலங்கை நாடியுள்ளது.முன்பு இலங்கைக்கு உதவ ராணுவத்தை அணுப்பியது போல், இம்முறை அனுப்பக்கூடாது. எந்த உதவியும் செய்யக் கூடாது என்றார்.