For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கீதையின் பாதையில்... யோகம் - யாகம் - துரோகம்

By Staff
Google Oneindia Tamil News

ஒரு ஊர்ல ஒருத்தி இருந்தா.

அவளுக்கு ஒரே ஒரு மகன் இருந்தாம். புருசன் சின்ன வயசுல செத்துப் போயிட்டாம்.

அவள் மகா கொடுசாலி (கொடுமைக்காரி). வம்பும் தும்பும் எங்கனடா கிடைக்கும்ன்னுதேடிக்கிட்டு அலைவா. யாரும் வாய்கொடுத்து மீள முடியாது.அவளைக் கண்டாலெபத்தடிக்கு பயந்து விலகிப் போயிடுவாங்க.

அப்படியே போனாலுங்கூட விடமாட்டா. எதையாவது பேசி சிலுகு இழுக்கப் பாப்பா.

இப்படி இருக்கையில, அவளோட மகன் வளந்து இளந்தாரியா ஆயிட்டான்.

அவனுக்கு ஒரு கலியாணத்த முடிச்சி வச்சிரணும்னுட்டு ஆனமட்டும் பாக்கா.பொண்ணுதாம் யாருமே தர மாட்டேங்காக. யாரக் கேட்டாலும் ""அடி கொடுமையே,அவ வீட்டு மருமகளாப் போறத விட எம் மகள ஒரு இடிஞ்ச கிணத்துல கொண்டிதள்ளீட்டு சூசிவான்னு இருந்துட்டுப் போலாமே""ன்னு பேசுதாக.

அவ மகன் அவஅம்புட்டு வம்புக்குப் போகமாட்டாம். அதோட வம்புக்கு அலையிதஆத்தாளையும் அப்பப்ப கண்டிச்சிம் வப்பாம்.

வருசம் ஆக ஆக அவனுக்கும் வயசும் ஏறிக்கிட்டே போகுது. வாயாடி ஆத்தாளாலநமக்கு இன்னும் கலியாணம் முடிய மாட்டேங்ன்னு அவனுக்கு ஆத்தா பேர்லகோவமான கோவம்மில்லெ.

முன்னெல்லாம் ஊத்துன கஞ்சிய குடிச்சிட்டு ஏவுத வேலெய செஞ்சிட்டிருந்தவம் இப்பஆதாதாளைக் கண்டாலே அந்த வசவு வைதாம்.

""ஒன்னால தா எனக்கு யாருமெ பொண்ணு தர மாணேங்காக""ன்னு வெளமெடுத்துவைதாம். ஊருக்குள்ள அம்புட்டு பேரையும் அறட்டி வச்சிருந்த ஆத்தாளுக்குஅவனெக் கண்டா பயமாவருது.

""நா என்னப்பா செய்வேம்; அம்புட்டு பேரிட்டயும் ரூவா வேண்டாம் காசு வேண்டாம்பொண்ண மட்டும் தந்தாப் போதும்ன்னுதாம் கேக்கெம்;ஒருத்தருமெ தரமாணேங்காகளெ!""

ஆத்தாக்காரி அப்படிச் சொன்னாதும் அவன் அங்கென கிடந்த செறாய(விறகுக்கட்டை) தூக்கி ஆத்தா மண்டைக்கு நேரா ஓங்கிட்டாம்!

""எனக்கு வார தைக்குள்ள கலியாணம் முடிச்சி வெக்கல ...ஒண்ண உசுரோட குழியவெட்டி பொதைச்சிருவேம்""ன்னு சொன்னதும் பதறிப் போயிட்டா.

கலியாணத்துல இவனுக்கு இம்புட்டு ஆசை இருக்கும்ன்னு ஆத்தாகாரிநினைக்கவேயில்ல.

சரி; உள்ளூர்ல தாம் யாரும் பொண்ணு தர மாட்டேங்கா, பக்கத்து ஊர்லயாவதுகேப்போம்னு நெனைச்சி சிறகு, பொங்கட்டியோட தாலியும் செய்யக் குடுத்துவாங்கிக்கிட்டு, மடியில கொஞ்சம் பணத்தையும் வச்சிக்கிட்டு பக்கத்து ஊருகளுக்குப்போனா.

போனா. இவளோட பவுசுஅங்கிட்டெல்லாங்கூட பரவி இருக்கு. இவளெப் பாத்தும்பாராதது போல ஓடுதாக!

ஊரு ஊரா அலைஞ்சா.

கடோசியில ஒரு ஊர்ல , ஒரு வீட்டுல தகப்பனும் மகளும் மட்டும் கூலி லேலெ செஞ்சிபிழைக்கிற ஒரு குடும்பம். தகப்பங்காரனுக்குத் தீராத வயித்துவலியில கிடையாப்படுத்துக் கிடக்காம். மகளெ ஒரு மகராசங்கிட்ட பிடிச்சிக் கொடுக்காமலெ செத்துப்போயிருவமோன்னு பதறிக்கிட்டுக் கிடக்காம்.

இவ போயி சேந்நா. மடியில கொண்டாந்த நகைகளக் காட்டி, பொண்ணுக்குஒண்ணுமே தர வேணாம். பொண்ணுட்டுந் தந்தாப் போதும்; இப்பவேகலியாணந்தாம்ன்னா.

உசுரு இப்பவோ பிறகோன்னு இருந்தவனுக்கு மேலோக்துல இருந்து அம்மனே இறங்கிவந்தது போல இருந்தது. மகளெக் கூப்பிட்டு கையெப் பிடிச்சி இவ கையிமேலவச்சமானைக்கே உசுர அப்பவே விட்டுட்டாம். இவளுக்கு சந்தோசம் பொறுக்கல.

தகப்பங்காரனும் செத்துப் போயிட்டாம். யாருமே இல்லெ. இப்பிடி ஒரு அக்கு தொக்குஇல்லா சம்மந்தம் கிடைக்கணும்மெ; மருமகளெ என்ன செஞ்சாலும் இனி யாருங்கேக்க வர மாட்டாங்கெ. மருமகளெ ஊருக்குக் கூட்டிட்டு வந்தா. வார பாதையில ஒருசீனிக் கல்லு இருந்தது. பாதையப் பாத்து நடக்காம ஆகாசத்தெப் பாத்து நடந்ததுனாலபெருவிரல்ல பலமாத் தட்டி தாங்க முடியாத வலி. ரத்தம் கொட்டுது. விளங்காவதளக்கூட்டீட்டு வந்தனோஎங்காலுக்கு இப்பிடிஆச்சோன்னு அங்க பிடிச்ச வசவுசதாம்ஊருவந்தும் நிக்கல. பெத்த அப்பனெ முழுங்கிட்டா; இப்பொ என்ன முழுங்கவந்திருக்கான்னு சொல்லுதா!

பொண்ணப் பார்க்க ஊர்க்காரங்க வந்தாங்க.நல்ல பொண்ணுதாம்;மூக்கும் முழியும்அழகா இருக்கா. ஆனா ரொம்ப்ப பாவம்; இந்தப் பாதகத்தியிட்டெ என்னத்த இருந்துகுப்பை கொட்டப் போறா. அவஎன்னத்த இவள முழுங்குறது. இவளே முழுங்கிருவாமருமகளென்னு அவங்களுக்குள்ளெ பேசிக்கிட்டடே போனாங்க.

ஒரு நல்ல நா பாத்து, ஊரு நாட்டாமெ, பூசாரி, ரெண்டு தாயிபிள்ளெகன்னு கூடிகோயில்ல வச்சி சுருக்கமா கலியாணத்த முடிச்சாக.

மகனுக்கு சந்தோசம். ஆத்தாள அப்பிடி மெச்சிக்ககிடுதாம். ராவும்பகலும் ஓடி ஓடிவேல செய்தான். இங்கெ ஆத்தாகாரி மருமகெள அந்தப்பாடு படுத்துதா. நகம் பேந்தகட்டை விரலு கொதறிக்கிடுச்சி. அதெச் சாக்குவச்சி வைதா.

புளிச்சசயும் சளிச்சதையும் ஊத்தி கண்ணால பாத்ததில்ல. மகன் கிட்ட நம்மபத்திஎன்னமும் பொரணி சொல்லீருவாளோன்னுட்டு அவன் வரவும் ரெண்டு பேர்கிட்டவும்போயி சக்கரையா பேசுதா.

பொண்டாட்டி வந்ததுல இருந்து ஆத்தாளுக்கு நல்ல குணம் வந்துருச்சேன்னுஅவம்பாட்டுக்கு வேலஉண்டு அவம் உண்டுன்னு திரியுதான். இப்பிடி இருக்கையில,புளிச்ச கஞ்சியும் சளிச்ச கஞ்சியும் குடிச்சி குடிச்சி மருமகளுக்கு நாக்கு செத்துப்போச்சி. என்னத்தையாவது சூடா கொதிக்க கொதிக்க காய்ச்சிப்பிறக்கி திங்கணும்னுஇருக்கு. மாமியா காவல் பொல்லாக்காவலா இருக்கு. அப்ப ஒரு நா.

அந்த ஊரு பொங்கல் சந்தை வந்துச்சி. பொங்கச் சந்தைக்குப் போனாத்தான்ஆண்டபண்டம் அறுவதும் வாங்கிட்டு வரலாம். மாமியா மருமகளக் கூப்ட்டு ஒருவெரட்டு வெரட்டிட்டு சந்தைக்குப் போனா. அவ அங்கிட்டுப்போகவும் மருமகஇன்னைக்கு எப்பிடியாச்சும் வாய்க்கு ருசியா எதையாச்சும் செய்து தின்னுறவேண்டியதுதாம்ன்னு தீர்மானிச்சுட்டா.

நாழி பச்ச நெல்ல எடுத்து குத்துனா. பச்சரிசிச் சோத்தப் பொங்கினா. நாழி உளுத்தம்பருப்ப எடுத்து கடையனும்ணு வறுத்தா. உளுந்து வறுபடுற வாசம் தெருவோடமணக்கு.

பயறு வறுபட்டுகிட்டிருக்கையிலேயே மாமியார்காரி வந்துட்டா. தெரு முக்குத்திரும்பும்போதே மணத்தக் கண்டுக்கிட்டா. அய்யோ அய்யோன்க்கிட்டே வந்தா.

மாமியா சத்தத்த கேட்டதும் இவளுக்கு ஒண்ணும் ஓடலே. இனி என்னத்த செய்யப்போறம்ன்னுட்டு வறுத்த உளுந்த அப்பிடியே தூக்கி தன்னோட மடியில தட்டிக்கிட்டுவரை ஓட்டை அங்கிட்டுத் தூக்கி வச்சா.

மாமியார்க்காரி மூக்கை மூக்கை சுழிச்சி மோப்பம் பிடிச்சிக்கிட்டே என்னடி பயறுமணக்கு; வறுத்தியான்னு கேக்கவும், இல்லியே அயித்த, பச்செ நெல்லு குத்திசோறுதேம் காச்சினேம். பயறு வறுத்துக் கடைவமான்னு வரையோடு எடுத்ததேம். நீங்கவந்துட்டீகங்கவும் அம்புட்டுக்கு ஆகிப்போச்சாடீ. நா இல்லாத போது என்னமாடிநெல்ல எடுக்கப்போச்சி. போ; காட்டுக்குப் போயி இப்பவே தலைச்சுமைக்கு ஒரு சுமைவிறகு வெட்டிட்டு வான்னு முடுக்கி விட்டா.

கொதிக்க கொதிக்க வறுத்த பயற மடியில கட்டுன மருமகளுக்கு அடிவயிறு மொத்தமாவெந்து போச்சி. அந்த இளந்த இடம் பூராவும் அப்பிடியே கொதறிருச்சி.வாய்பேசமாட்டாம காட்டுக்கு வந்தா.

ஒரு பொதருக்குள்ள மடியில இருந்த உளுத்தம் பயற தட்டுனா. மாமியாளுக்கு பயந்துரணத்ததோட ரணமா ஒருகட்டு பெறக்கினவிறகும் வெட்டுன வெறகுமாதலைச்சுமையோட வீட்டுக்கு வந்தா.

நாலு நா ஆச்சி.

புளிச்சதும் சளிச்சதுமா குடிச்சதுல உடம்புக்கு ஆகாம புண்ணும் பொருசாத ஆயிமேலுக்கு எப்பிடியோ வருது. ஆத்தா வெளிய போன நேரமா பாத்துபொண்டாட்டியிட்ட " "பேசு " " வம்ன்னு வந்த புருசன் இந்தப் புண்ணப் பாத்துப் பதறிப்போனாம்.

என்ன ஏதுன்னு விவரம் கேக்க, இவளும் எல்லா விவரத்தையும் ஆதியோட அந்தமாசொல்லி அழுதா.

அவ சொன்னத கேட்டதும் அவனுக்கு ஆங்காரம் வந்திருச்சி. விறகுக்கட்டையாலஆத்தாள நொறுங்க வெளுத்தாம்.

பண்டுதரக் கூட்டியாந்து பெண்டாட்டி புண்ணக் காமிச்சாம்.

அடி வகுறோடபோகாம புண்ணு குடலுக்கும் தாவிட்டது. இனி ஒண்ணுஞ் செய்யமுடியாதுன்னுட்டார்.

இவளும் புருசங்கிட்ட நா இனி பொழைக்க மாட்டேம். நீரும் உம்ம ஆத்தாளும் நல்லாஇருங்கன்னு சொல்லி சன்னி வந்து செத்துப் போயிட்டா.

பொண்டாட்டி செத்ததுலயிருந்து ஆத்தாள அவம் வீட்டுக்குள்ள விடமாட்டேனுட்டாம்.

அவ வீடு வீடா பிச்சை எடுத்தா.அந்தக் கொடுசூலிக்கு யாரு பிச்சை போடுவா. பழையகந்தச்சீலையும் பறட்டைத்தலையிமா கோட்டிக்காரி கெணக்கா ஊருக்குள்ளஅலையுதா. அந்த மலையடி ஊர் பக்கத்துல இருக்க எந்தப் புதரும் பக்கத்துலபோனாலும் இப்பவும் பொதுபொதுன்னு வறுத்த உளுந்து வாயை வரும்போதெல்லாம் " " நல்ல பாம்பு முட்டையிட்டு அடை காக்கு; அதாம் அந்த மணம் " "ன்னுஞஅ சொல்றவக் இருக்காங்க.

(நல்ல பாம்பு முட்டையிட்டு அடைகாக்கும் போதுதான் காட்டுப் புதர்களில் இப்படிவறுத்த உளுந்தின் வாசம் வரும் என்று இப்போதும் நாட்டுப்புறத்து நம்பிக்கைபேசப்படுகிறது.)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X