For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

இலங்கை தமிழர் கூட்டத்தில் கனடா அமைச்சர்கள்: தூதர் கண்டனம்

டொரான்டோ:

இலங்கைத் தமிழர் அமைப்பு நடத்திய கூட்டத்தில் இரு கனடா நாட்டு அமைச்சர்கள் கலந்து கொண்டதற்கு இலங்கை அரசுகண்டனம் தெரிவித்துள்ளது. இது உலகுக்கு தவறான சமிக்கையை தெரிவித்துவிடும் என இலங்கை அரசு கூறியுள்ளது.

இலங்கை புத்தாண்டு தினத்தையொட்டி ஒட்டாவாவில் கடந்த சனிக்கிழமை விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கனடா தமிழர்சங்கங்களின் கூட்டமைப்பு (பாக்ட்) இந்த கூட்டத்தை நடத்தியது. இதில் கனடா நாட்டு நிதியமைச்சர் பெளல் மார்ட்டின், சர்வதேசகூட்டுறவுக்கான அமைச்சர் மரியா மினா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர்கள் கலந்து கொண்டதற்கு நேசன் போஸ்ட் நாளிதழ் கண்டனம் தெரிவித்துள்ளது. தீவிரவாத அமைப்பின் நிகழ்ச்சியில்அமைச்சர் கலந்து கொண்டுளளார் என்று அந்த நாளிதழ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. கனடாவுக்கான இலங்கைதூதர்அனந்த குனசேகராவிடம் அந்த நாளிதழ் பேட்டி கண்டுள்ளது. அதில் அவர், கனடா நாட்டு அமைச்சர்களின் செயல் தங்களுக்குஅதிர்ச்சி அளித்துள்ளதாகவும் வருத்தம் தந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அமைச்சர்களுக்கு இந்த அமைப்பு குறித்து முழுமையாக தெரிவிக்கப்பட்டிருக்காது எனவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்கவெளியுறவுத்துறையும் இந்த அமைப்பை தீவிரவாத அமைப்பாக பட்டிலிட்டிருப்பதாக நேசன் போஸ்ட் கூறியுள்ளது.

ஆனால், நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மார்ட்டின் இலங்கைத் தமிழர்களை வெகுவாகப் பாராட்டினார். கனடாவின் வளர்ச்சிக்குஇலங்கை தமிழர்கள் பெரும் உதவி புரிந்திருப்பதாகவும் கூறிய அவர் இந்த அமைப்பு இலங்கையில் அரசுக்கு எதிரானபோருக்காக நிதி திரட்டுகிறதா என்பது குறித்து எனக்குத் தெரியாது என்றார்.

அமைச்சர் மார்ட்டினிடம் ஐ.ஏ.என்.எஸ். நிறுவனம் இது குறித்துக் கேட்டபோது, இந்த நிகழ்ச்சி இலங்கையில் அரசுக்கு எதிராகபோர் நடத்தும் அமைப்புக்கு நிதி திரட்டுவதற்காக நடக்கவில்லை. இது ஒரு கலாச்சார நிகழ்ச்சி. அவர்களை (தமிழர்களை)நாங்கள் அங்கீகரித்துள்ளோம். தங்களது கலாச்சாரம், அன்பை பரிமாறிக் கொள்வதற்காகத் தான் இந்த நிகழ்ச்சியை அவர்கள்நடத்தினார்கள் என்றார்.

பெண் அமைச்சரான மினா கூறுகையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக அர்த்தமில்லை,எல்.டி.டி.ஈவுடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசு முயல்வதை வரவேற்கிறேன். பேச்சுவார்த்தையும் சமரசமும் தான் இந்தப்பிரச்சனை தீர ஒரே வழி என்றார்.

அமைச்சர்கள் கலந்து கொண்டதை விமர்சித்த இலங்கைத் தூதரின் கருத்துக்கு கனடா தமிழரான வழக்கறிஞர் ஜெகன் மோகன்கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறுகையில், கனடா நாட்டு மக்களளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைச்சர் என்ன சாப்பிடவேண்டும் யாருடன் சாப்பிட வேண்டும் என்று சொல்ல இலங்கை தூதருக்கு என்ன அதிகாரம் உள்ளது?. இது தமிழர்கள் மீதானதாக்குதல். இது கனடா அரசியலில் இலங்கை அரசு தலையிடுவதற்கு சமம். ஒரு சமூக நிகழ்ச்சியில் இலங்கை அரசு ஏப்படிதலையிட முடியும்.

பாக்ட் அமைப்பு தமிழ் கலாச்சாரம், இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு கனடாவில் மறுவாழ்வு கிடைக்கச் செய்தல் ஆகிய பணிகளில்ஈடுபட்டு வருகிறது. இது மிகுந்த மதிப்பு மிகுந்த ஒரு அமைப்பு என்றார் ஜெகன்.

ஐ.ஏ.என்.எஸ்.

இந்த செய்தி குறித்து உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X