தமிழகத்தில் இன்று
சென்னை:
தமிழக அமைச்சரவை கூடி இலங்கைப் பிரச்சனை குறித்து தீவிர ஆலோசனை நடத்தியது.
இலங்கையில் யாழப்பாணம் பகுதியில் போர் நடந்து வருகிறது. விடுதலைப் புலிகள் ராணுவத்தினரை சுற்றிவளைத்துள்ளனர். அவர்களை விடுவிக்க இந்தியாவிடம் இலங்கை அதிபர் சந்திரிகா கோரிக்கை விடுத்தும்இந்தியா அதை நிராகரித்து விட்டது.
இப்பிரச்சனை தொடர்ந்து நீடித்து வரும் இந்நிலையில் தமிழக அமைச்சரவை செவ்வாய்க்கிழமை கூடியது.இக்கூட்டத்திற்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் இலங்கைப் பிரச்சனையினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் தமிழகத்திற்குள் நுழைந்துவிட வாய்ப்பிருக்கிறது. தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள்தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படியிருக்கிறது என்பதுகுறித்து முதல்வர் தெரிந்து கொண்டார்.
மேலும் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் அகதிகள் யாரும் எளிதில் தமிழகத்திற்குள் நுழைந்து விடமுடியாது. தலைக்காவிரியில் ஏராளமாகக் குவிந்துள்ள அகதிகள் விசைப்படகு மூலம் கடந்த வாரம் தமிழகத்திற்குவந்தார்கள். அவர்களில் 23 பேரை தமிழகப் போலீசார் மீட்டனர்.
ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர் பகுதிகளிலும் கடற்கரையோர மாவட்டங்களிலும் பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளதைக் குறித்தும் முதல்வர் தெரிந்து கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டம் மே 4 ம் தேதி நடப்பதாக இருந்தது. முதல்வர் கருணாநிதி, பிரதமர் வாஜ்பாயைச்சந்திக்க டெல்லி சென்றுவிட்டதால் இந்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது.
யு.என்.ஐ.