தமிழகத்தில் இன்று
சென்னை
மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து நாடு முழுவதும் வியாழக்கிழமை பொது வேலை நிறுத்தத்திற்கு 40 தொழிற்சங்கங்கள்அழைப்பு விடுத்துள்ளன.
தமிழகத்தில் அதிமுக, தமாகா, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் அனைத்தும் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவுதெரிவித்துள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் வியாழக்கிழமை வழக்கம் போல் பஸ், ரயில்கள் ஓடும் என்றும், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்முழுமையாக செய்யப்பட்டுள்ளன என்றும் சென்னை போலீஸ் கமிஷனர் காளித்து, ரயில்வே போலீஸ் ஐ.ஜி. திலகவதி ஆகியோர்சென்னையில் புதன் கிழமை கூட்டாக தெரிவித்தனர்.
நாடு முழுவதும் நாளை வியாழக் கிழமை (11ம் தேதி) பொது வேலைநிறுத்தம் மேற்கொள்ள அகில இந்திய அளவிலான தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளன. இதன்படி வியாழக்கிழமை காலை 6 மணி முதல் 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம்நிடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் இந்த பொது வேலைநிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆளும் கட்சியை சேர்ந்ததொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை போன்ற தொழிற்சங்கங்கள் மட்டும் வேலை நிறுத்தத்தை புறக்கணிப்பதாகஅறிவித்துள்ளன. அதேபோல் வணிகர்களின் பொது அமைப்பான தமிழ்நாடு வணிர்கள் சங்கப் பேரவை, வேலை நிறுத்தத்தில்கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளன.
இதற்கிடையில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து இந்த வேலை நிறுத்தம் நடைபெறுவதால், மத்திய மாநில அரசுகளுக்குஎதிரான கட்சிகளான அதிமுக, தமாகா, காங்கிரஸ் போன்ற அரசியல் இயக்கங்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.அக்கட்சிகளை சோர்ந்த தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன.
ஆனால், ஆளும் கட்சியான திமுகவும், அதன் தோழமைக் கட்சிகளும், அவற்றின் தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்தைபுறக்கணிப்பதால், வேலை நிறுத்தம் முழு வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்தியில், மாநிலத்தில் ஆளும்அரசுகளை எதிர்த்து நடைபெறுவதால், ஆளும் அரசுகள் அனைத்து அலுவலகங்களையும், அரசு போக்குவரத்துஸ்தாபனங்களையும் வியாழக்கிழமை வழக்கம் போல் செயல்பட செய்ய நடவடிக்கை எடுத்துள்ளன.
அதன் காரணமாக தமிழகத்தில் பஸ், ரயில் போக்குவரத்து வழக்கம் போல் நடைபெறும் என்று அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.பஸ், ரயில் போக்குவரத்துக்கு முழு போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னையில் புதன்கிழமை அன்று சென்னை போலீஸ் கமிஷனர் காளித்து, ரயில்வே போலீஸ் ஐ.ஜி. திலகவதிஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் அளித்த பேட்டி:
போக்குவரத்துகள் வழக்கம் போல் இயங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 15 ஆயிரம்போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் போதுமான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.
பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவார்கள். பஸ்களையோ,ரயில்களையோ தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் அரசு அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்வோர்களைதடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லாமல் பஸ், ரயில்களை ஓட்டவும், அரசு அலுவலகங்கள் இயங்கவும் விரிவான ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன என்றனர்.