உலக டென்னிஸ் இரட்டையர் பட்டம் - ஆஸ்திரேலிய ஜோடி சாதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil
அஜித்ஜோகி மகள் தற்கொலைக்கு காதல் தோல்வி காரணம்

டெல்லி:

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அஜித்ஜோகி மகள் தற்கொலைக்குக் காதல் தோல்வி காரணம் என்று தெரிய வந்துள்ளது.

இது குறித்துக் கூறப்படுவதாவது:

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக இருப்பவர் அஜித்ஜோகி. இவரது மகள் அனுஷா. வயது 20. இவர் டெல்லியிலுள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்த போதுதன்னுடன் படித்த மாணவர் ஒருவரைக் காதலித்தார்.

இது அஜித்ஜோகிக்குத் தெரிய வந்ததுடன் அவர் தன் மகளைக் கண்டித்து அவளை அமெரிக்காவில் உள்ள கல்லூரி ஒன்றில் சேர்த்தார். இதை அறிந்த அவளதுகாதலனும் அங்கே சென்றார். இருவரும் வீட்டிற்குத் தெரியாமல் சந்தித்து வந்தனர்.

இதற்கிடையே இந்த விஷயம் கேள்விப்பட்ட அஜித்ஜோகி அனுஷாவின் காதலன் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவன் என்பதைக் காரணம் காட்டிஅவளை அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு மீண்டும் அழைத்து வந்தார்.

பின்னர் அவளை மத்தியப்பிரதேசம் இந்தூரில் வசித்து வரும் தன் மனைவி ரேணுவிடம் அனுப்பி வைத்தார்.

அனுஷா தன் தாயிடம் தன்னை தன் காதலனுக்குத் திருமணம் செய்து வைக்கும்படிக் கூறினார். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை.

இதனால் மனமுடைந்த அனுஷா தன் இந்தூரில் தன் வீட்டிலுள்ள குளியலறையில் தூக்குப் போட்டு இறந்து போனார்.

சோனியா அதிர்ச்சி:

அஜித்ஜோகியின் மகள் அனுஷா தற்கொலை செய்து கொண்டது குறித்து விபரம் தெரிந்தவுடன் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி அதிர்ச்சிஅடைந்தார். அவர் நேரில் அவர் வீட்டிற்குச் சென்று துக்கம் விசாரித்தார்.

யு.என்.ஐ.

Back to Index Page

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற