தமிழகத்தில் இன்று

Posted By:
Subscribe to Oneindia Tamil
மக்களிடையே ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும்: தேவகவுடா

கோவை:

பொருளாதாரக் கொள்கை, வேலைவாய்ப்பு, தீவிரவாதம் போன்ற முக்கிய பிரச்னைகளில் நாடு முழுவதும் பொதுமக்களிடையே ஒருமித்த கருத்தை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கோவையில்ஜனதாதளம் (மதச்சார்பின்மை) கட்சித்தலைவர் தேவேகவுடா தெரிவித்தார்

கோவையில் சனிக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

புதிய பொருளாதாரத் கொள்கையை அமல்படுத்துவதில் தேசிய ஜனநாயகக் கூட்டணிகளிடையே கருத்துவேறுபாடு உருவாகியுள்ளது. இது நாட்டில் பிரச்னையை ஏற்படுத்தும்.

எல்லை தாண்டும் தீவிரவாதமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

முன்னாள் பிரதமர் சந்திரசேகர், வி.பி.சிங், குஜ்ரால், தேவேகவுடா ஆகியோர் இத்தகைய பிரச்னைகளை பொதுமக்களிடம் எடுத்துச் சொல்ல ஓரணியில் திரண்டுள்ளனர்.

தேசிய ஜனநாயக முன்னணி தனது கொள்கையிலிருந்து விலகி விட்டது. இருந்த போதிலும் பா.ஜ.,தலைமையிலானஇக்கூட்டணி அரசு ஐந்து ஆண்டுகள் பதவியில் நீடிக்க வேண்டும்.

மீண்டும ஒரு தேர்தலை சந்தித்தபோது நாட்டின் நலனுக்கு ஏற்றதல்ல.

இவ்வாறு தேவேகவுடா தெரிவித்தார்.

Back to Index Page

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற