For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செயலை விட அதன் பயனை நேசித்தால்!

By Staff
Google Oneindia Tamil News
தீவுகளில் குடியேறி வரும் இலங்கை அகதிகள்

ராமநாதபுரம்:

யாழ்ப்பாணத்தில் நடக்கும் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் , யாழ்குடா அருகே உள்ள தீவுகளில்தஞ்சம் புகுந்துள்ளனர்.

யாழ்பாணத்தில் கடும் போர் நடப்பதால் அங்குள்ள தமிழர்கள் பாதுகாப்புக்காக அங்கிருந்து வெளியேறிவருகின்றனர். ராணுவம், புலிகள் இடையே நடக்கும் துப்பாக்கிச் சண்டை, ஆர்ட்டிலரி மோட்டார் தாக்குதலில்தமிழர்கள் இடையில் சிக்கியுள்ளனர்.

இதையடுத்து பாதுகாப்பு தேடி அவர்கள் ஊரைவிட்டு வெளியேறி படகுகள் மூலம் அருகாமையில் உள்ளதீவுகளில் குடியேறி வருகின்றனர். இவர்கள் தமிழகத்திற்கு வர காத்துள்ளனர்.

ஆனால், தமிழர்கள் யாழ்பாணத்திலிருந்து வெளியேற்க்கூடாது என்று ராணுவம் மிரட்டி வருவதாக செய்திகள்வருகின்றனர். இப்போது ஊருக்குள் மக்கள் இருப்பதால் அவர்களுக்கு சேதம் ஏற்படாமல் இருக்கும் வகையில்புலிகள் ஜாக்கிரதையாகத் தான் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மக்கள் வெளியேறிவிட்டால், புலிகளின் தாக்குதல்தீவிரமடையும் என ராணுவம் அஞசுவதால் மக்கள் வெளியேற ராணுவம் ஆட்சேபித்து வருகின்றது.

இலங்கை ராணுவம் குறிப்பிட்ட சில பகுதிகளில் மக்களையே கேடயமாகப் பயன்படுத்தி போராளிகளின்தாக்குதலிருந்து தப்பி வருகிறது. யாழ்ப்பாண மாவட்டத்தின் பிற பகுதிகளிலிகருந்து வெளியேறியஆயிரக்கணக்கானோர் படகு மூலம் மண்டைத் தீவு, வேலணை, அனலைத் தீவு உள்ளிட்ட சில தீவுகளில் தஞ்சம்புகுந்துள்ளனர்.

தமிழகத்துக்கு அகதிகளாகச் செல்ல இத்தீவுகளின் கடலோரப் பகுதியில் காத்திருக்கின்றனர். யாழ்குடா அருகிலுள்ளதீவுகளிலிருந்து தமிழக கடலோரப் பகுதிக்கு வருவதற்கு விசைப்ப படகுகள் தேவை. ஆனால், மக்களுக்கு படகுகள்கிடைக்கவில்லை. அப்படியே படகுகள் கிடைத்தாலும் வரும் வழியில் இலங்கை கடற்படையிடம் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதால் படகோட்டிகள் அவர்களை ஏற்றிவரத் தயங்குகிறார்கள்.

யாழ்ப்பாணப் பகுதியில் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் உணவுப் பொருள்களுக்கு பெரும் தட்டுப்பாடுஏற்பட்டுள்ளது.

போர் தீவிரமடைந்தால் ராமேஸ்வரம் பகுதியில் மீன்பிடி தொழில் பாதிக்கப்படலாம். இதனால் 20 ஆயிரத்துக்கும்மேற்பட்ட மீனவர்களுக்கு பிரச்சனை ஏற்படும். ராமநாதபுரம், புதுகை. தஞ்சை, நாகை மாவட்ட மீனவர்கள் கடலில்மீன் பிடிக்க இந்திய இலங்கை கடல் எல்லைப் பகுதிக்கு செல்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X