For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனைவியை அடித்துத் துன்புறுத்திய கிரிக்கெட் வீரர் கைது

By Staff
Google Oneindia Tamil News

மே 16, 2000

குயிலின் காதற் கதை
(இரண்டாம் பாகம்)

பாவிமனந் தானிறுகப் பற்றிநிற்ப தென்னவோ?
நெஞ்சத்தே தைக்க நெடுநோக்கு நோக்கிடுவீர்.
மஞ்சரே, என்றன் மனநிகழ்சி காணீரோ?
காதலை வேண்டிக் கரைகின்றேன் இல்லையெனில்
சாதலை வேண்டித் தவிக்கின்றேன்"" என்றதுவே.(50)


சின்னக் குயிலிதனைச் செப்பியவப் போழ்தினிலே,
என்னைப் புதியதோர் இன்பச் சுரங்கவர,
உள்ளத் திடையும் உயிரிடையும் ஆங்கந்சப்
பிள்ளைக் குயிலினதோர் பேச்சன்றி வேறற்றேன்;
""காதலோ காதலினிக் காதல் காதல் கிடைத்திலதேல் (55)


சாதலோ சாதல்"" எனச் சாற்றுமொரி பல்லவியென்
உள்ளமாம் வீணைதனில், உள்ளவீடத்தனையும்
விள்ள ஒலிப்பதலால் வேறோர் ஒலியில்லை,
சித்தம் மயங்கித் திகைப்போடுநான் நின்றிடவும்,
அத்தருணத் தேபறவை யத்தனையுந் தாந்திரும்பிச் (60)


சோலைக் கிளையிலெலாந் தோன்றி யொலித்தனவால்.
நீலக் குயிலும் நெடிதுயிர்த் தாங் கிஃதுரைக்கும்:
""காதல் வழிதான் கரடுமுர டாமென்பார்
சோதித் திருவிழியீர்! துன்பக் கடலினிலே
நல்லுறுதி கொண்டதோர் நாவாய்போல் வந்திட்டீர்; (65)


அல்லலுற நும்மோ டளவளாய் நான்பெறுமிவ்
வின்பத் தினுக்கும் இடையூறு மூண்டதுவே!
அன்பொடு நீரிங்கே அடுத்தகான் காநாளில்
வந்தருளல் வேண்டும். மறவாதீர், மேற்குலத்தீர்!
சிந்தை பறிகொண்டு செல்கின்றீர்! வாரீரேல்,(70)


ஆவி தரியேன், அறிந்திடுவீர், நான்கா நாள்.
பாவியிந்த நான்கு நாள் பத்துயுகமாக் கழிப்பேன்;
சென்று வருவீர்""என் சிந்தை கொடுபோகின்றீர்
சென்று வருவீர்""தேறாப் பெருந்துயரங்
கொண்டு சிறுகுயிலுங் கூறி மறைந்ததுகாண்.(75)

(அடுத்து காதலோ காதல்)

Back To Index

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X