For Quick Alerts
For Daily Alerts
தமிழகத்தில் இன்று
ஊட்டி ஹிந்துஸ்தான் தொழிற்சாலை மூடப்படாது: அமைச்சர் ஜோஷி
கோவை:
ஊட்டியில் உள்ள ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை மூடப்படாது என மத்திய பொதுத்துறைமற்றும் கனரக தொழிற்சாலை அமைச்சர் மனோகர் ஜோஷி உறுதியளித்துள்ளார்.
ஊட்டியில் சனிக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
ஊட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை மிக அதிக அளவில் கடன்பெற்றுள்ளது. இந்த தொழிற்சாலையை இயக்க அரசு அனைத்து விதமான முயற்சியையும் எடுத்து வருகிறது.இந்தத் தொழிற்சாலையில் 2 ஆயிரத்து 700 தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இதில் தானாக முன்வந்து ஓய்வு பெற விருப்பம் உள்ளவர்களுக்கு அனைத்து பயன்களையும் அளிக்க அரசு முடிவுசெய்துள்ளது. தொழிற்சாலை மறுசீரமைப்பு குறித்து ஆய்வு நடத்த கமிட்டி ஒன்று அமைக்கப்படும்.
இவ்வாறு மனோகர் ஜோஷி தெரிவித்தார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!