இந்திய கிரிக்கெட் வீரர்கள் லஞ்சம் வாங்கியிருக்க வாய்ப்-பில்-லை - லேலே
டெல்லி:
இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாரும் சூதாட்டக்காரர்களிடமிருந்து லஞ்சம் வாங்கியிருக்க வாய்ப்பில்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியச்செயலர் ஜெயந்த் லேலே தெரிவித்தார்.
லஞ்சம் வாங்கியதாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வாரிய அதிகாரிகள் மீதும் சமீபகாலமாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.இதுதொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரித்து வருகிறது.
இந் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாரும் லஞ்சம் வாங்கியிருக்கவோ, முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கவோ மாட்டார்கள் என்று நம்புவதாகலேலே தெரிவித்துள்ளார்.
சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், அசாருதீன் போன்ற சிறந்த வீரர்கள் கிரிக்கெட் விளையாடுவதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.50 லட்சம் முதல் ரூ.60லட்சம் பணம் சம்பாதிக்கின்றனர். அப்படியிருக்கும்போது கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கவேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை.ஆகவே, அவர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கமாட்டார்கள்.
கிரிக்கெட் என்பது அணி விளையாட்டு, ஓரிரு வீரர்கள் நினைத்தால் விளையாட்டின் முடிவை மாற்றி விடமுடியாது. அணியில் உள்ள வீரர்கள் அனைவரும்நன்றாக விளையாடினால்தான் அந்த அணி வெற்றி பெறமுடியும். பணம் வாங்கிக் கொண்டு ஓரிரு வீரர்கள் மோசமாக விளையாடினால் அந்த அணிதோற்கும் என்று கூறமுடியாது.
கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வாரிய அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளவே தவிர, அவை இன்னும் நிரூபிக்கப்படவில்லை.குற்றச்சாட்டுகளை நம்புவதற்கு ஏற்ப தகுந்த காரணங்கள் ஏதும் இல்லை.
குற்றச்சாட்டுகளால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், மோசமானகுற்றச்சாட்டுகளால் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்றார் லேலே.
யு.என்.ஐ.