கிரிக்கெட் சூதாட்டம்: சிபிஐ விசாரணைக் குழுவிலிருந்து 2 அதிகாரிகள் மாற்றம்
மே 23, 2000
(தொடர்ச்சி...)
பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா!
பூதங்க ளொத்துப் புதுமைதரல் விந்தையனில் ,
நாதங்கள் சேரும் நயத்தினுக்கு நேராமோ?
ஆசைதருங் கோடி அதிசயங்கள் கண்டதிலே,
ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ? (100)
செத்தைக் குயில்புரிந்த தெய்விகத் தீம் பாட்டெனுமோர்
வித்தை முடிந்தவுடன், மீட்டுமறி வெய்திநான்
கையில் வாளெடுத்துக் காளையின் மேல் வீசினேன்.
மெய்யிற் படுமுன் விரைந்ததுதான் ஓடிவிட ,
வன்னக் குயில்மறைய மற்றைப் பறவையெலாம் (105)
முன்னைப்போற் கொம்பு முனைகளிலே வந்தொலிக்க,
நாணமில்லாக் காதல்கொண்ட நானுஞ் சிறுகுயிலை
வீணிலே தேடியபின், வீடுவந்து சேர்ந்து விட்டேன்.
எண்ணியெண்ணிப் பார்த்தேன் எதுவும் விளங்கவில்லை
கண்ணிலே நீர் ததும்பக் கானக் குயிலெனக்கே (110)
காதற் கதையுரைத்து நெஞ்சங் கரைத்ததையும்,
பேதைநா னங்கு பெரியமயல் கொண்டதையும்,
இன்பக் கதையின் இடையே தடையாகப்
புன்பறவை யெல்லாம் புகுந்த வியப்பினையும்
ஒன்றைப் பொருள்செய்யா உள்ளத்தைக் காமவனல் (115)
தின்றெனது சித்தம் திகைப்புறவே செய்ததையும்,
சொற்றைக் குரங்கும் தொழுமாடும் வந்தெனக்கு
முற்றும் வயரிகளா மூண்ட கொடுமையையும்,
இத்தனை கோலத்தினுக்கும் யான்வேட்கை தீராமல்
பித்தம் பிடித்த பெரிய கொடுமையையும் - (120)
எண்ணியெண்ணிப் பார்த்தேன் எதுவும் விளங்கவில்லை!
கண்ணிரண்டும் மூடக் கடுந்துயிலில் ஆழ்ந்துவிட்டேன்!.